Breaking
Wed. May 15th, 2024

ஊழியர் சேம இலாப நிதியம், ஊழியர் நம்­பிக்கை நிதியம் ஆகி­ய­வற்றில் இருந்த பொது மக்­களின் 1150 கோடி ரூபாவை தெரிந்­து­கொண்டே மோசடி செய்­த­தாக குற்றஞ்சாட்டி முன்னாள் நிதி­ய­மைச்சர் என்ற ரீதியில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கும் மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்­ரா­லுக்கும் எதி­ராக வழக்­கொன்று தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. சட்­டத்­த­ரணி கெலும் குமார சிங்­க­வினால் நேற்று தாக்கல் செய்­யப்­பட்ட இந்த விசேட வழக்கை இன்று விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­வ­தாக கொழும்பு பிர­தான நீதிவான் கிஹான் பில­பிட்­டிய நேற்று அறி­வித்தார்.

மஹிந்த ராஜ­ப­க் ஷ­வையும் முன்னாள் மத்­ திய வங்கி ஆளுநர் கப்­ராலையும் பிர­தி­வா­தி­க­ளாக குறிப்­பிட்டு தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள இந்த வழக்கில் பிர­தி­வா­திகள் இரு­வரும் தண்­டனை சட்டக் கோவையின் 136 (01), 139 (01) ஆகிய பிரி­வு­களின் கீழ் குற்றம் இழைத்­துள்­ள­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இதில் முத­லா­வது பிர­தி­வா­தி­யாக அஜித் நிவாட் கப்­ராலும் இரண்­டா­வது பிர­தி­வா­தி­யாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவும் பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

இந் நிலையில் இந்த வழக்கின் சாட்­சி­யா­ளர்­க­ளாக அமைச்சர் ரவி கரு­ணா­ந­யக்க, பிர­தி­ய­மைச்சர் சுஜீவ சேன­சிங்க, மத்­திய வங்கி ஆளுநர் அர்ஜன மகேந்­திரன், கலைக்­கப்­பட்ட பாரா­ளு­மன்றின் கோப் குழுவின் செய­லாளர் டியூ குண­சே­கர, நம்­பிக்கை நிதிய செய­லாளர் சம­ர­துங்க, மத்­திய வங்கி அதி­கா­ரி­க­ளான வீர­சிங்க, சில்வா மற்றும் சமர சிறி ஆகியோர் பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

மஹிந்த ராஜ­பக் ஷ, அஜித் நிவாட் கப்ரால் ஆகி­யோ­ருக்கு மேல­தி­க­மாக லாப் கேஸ் உரி­மை­யாளர் வேக­பிட்­டிய, தம்­மிக பெரேரா, அஜித் தேவ சுரேந்திர, ஜயந்த தர்மதாஸ, உபாலி தரமதாச ஆகிய வர்த்தக பிரமுகர்களும் இந்த பாரிய மோசடியுடன் தொடர்புடையவர்கள் என பெயரிடப்பட் டுள்ளனர்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *