Breaking
Mon. Apr 29th, 2024

மக்கள் எதிர்­பார்க்கும் நன்­மை­களை வழங்கக் கூடிய புதிய அர­சாங்­க­மொன்றை ஐக்­கிய தேசிய முன்­னணிக் கட்சி அமைக்கும் என அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்­சியின் தேசியத் தலை­வரும், அமைச்­சரும், வேட்­பா­ள­ரு­மான ரிஷாட் பதி­யுதீன் தெரி­வித்தார்.

வவு­னியா சாளம்­பைக்­கு­ளத்தில் இடம்­பெற்ற தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில்,

ஜன­வரி 8ஆம் திகதி பெறப்­பட்ட வெற்­றியும் அதன் மூலம் மக்கள் எதிர்­பார்க்கும் நன்­மை­க­ளையும் வழங்கக் கூடிய புதிய அர­சாங்­க­மொன்று இன்னும் இரண்டு வாரங்­களில் உரு­வாகும். எனவே, நாட்டில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்த வேண்­டு­மானால் அனைத்து துறை­க­ளுக்கும் சுதந்­திரம் அவ­சி­ய­மாகும்.

முன்­னைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் முஸ்­லிம்கள் மீதான விரோத மனப்­பான்­மை­யி­னால்தான் அவர் ஜனா­தி­பதி தேர்­தலில் தோற்­க­டிக்­கப்­பட்டு விரட்­டி­ய­டிக்­கப்­பட்­டுள்ளார். இன்று நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்சி செய்து வரு­கின்­றது. முஸ்லிம் விரோத செயற்­பா­டுகள் தற்­கா­லி­க­மாக தணிந்­துள்­ளன. இருந்­தாலும் எதிர்­கா­லத்தில் முஸ்லிம் விரோத செயற்­பா­டுகள் தலை­தூக்­கு­வ­தற்­கான நிலை­மையும் காணப்­ப­டு­கின்­றது.

இவ்­வா­றான நிலை­யி­லேயே அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் சில இடங்­களில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யுடன் இணைந்து யானைச் சின்­னத்­திலும் அம்­பா­றையில் மயில் சின்­னத்தில் தனித்தும் போட்­டி­யி­டு­கின்­றது.

அம்­பாறை மாவட்டம் முஸ்லிம் சமூ­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் இதயம் போன்­றது. இது முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு தாய்­வீ­டாகும். கடந்த முப்­பது வரு­ட­மாக முஸ்லிம் கட்சி என்று சொல்­லு­கின்ற முஸ்லிம் காங்­கிரஸ் முஸ்­லிம்­க­ளுக்கு எது­வுமே செய்­ய­வில்லை. முஸ்­லிம்­க­ளுக்கு சரி­யான பாதை­யையோ தலைமைத்­து­வத்தையோ வழங்­க­வில்லை. இது ஒரு மிகவும் பரி­தா­ப­க­ர­மான நிலை­யாகும்.

இந்த நாட்டில் சுமார் 23 இலட்சம் முஸ்­லிம்கள் வாழ்ந்து வரு­கின்­றார்கள். இவர்­களில் சுமார் 13 இலட்சம் முஸ்லிம் வாக்­குகள் இருக்­கின்­றன. இந்த வாக்­கு­களை எமது உரி­மைகள் தேவை­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக நாம் சரி­யான முறையில் பயன்­ப­டுத்த வேண்டும் என்றார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *