Breaking
Mon. May 20th, 2024
ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் இலங்கை தொடர்­பான அறிக்கை வெளி­யி­டப்­ப­டி­ருந்த நிலையில் மஹிந்த ராஜபக்ஷ ஆட்­சியில் இருந்­தி­ருந்தால் இன்று நாட்டின் நிலைமை என்­ன­வா­கி­யி­ருக்கும் என அமைச்சர் நிமல் சிறி­பா­லடி சில்வா கேள்வி எழுப்­பினார். ஐக்­கிய நாடுகள் மனித உரி­மை பேர­வையில் இலங்கை குறித்து கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள தீர்­மானம் தொடர்பில் முதலில் மஹிந்த ராஜபக்ஷவே மகிழ்ச்­சி­ய­டைய வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.
ஐக்­கிய நாடுகள் சபையில் இலங்கை குறித்து நிறை­வேற்­றப்­பட்­டுள்ள தீர்­மானம் தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ அதிருப்தியை வெளிப்­ப­டுத்­தி­யுள்ள நிலையில் அது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் நிலைப்­பாட்டை வின­விய போதே போக்­கு­வ­ரத்து அமைச்சர் நிமல் சிறி­பா­லடி சில்வா மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,
ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் இலங்கை தொடர்பில் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள தீர்­மானம் குறித்து முதலில் மஹிந்த ராஜபக் ஷவே மகிழ்ச்­சி­ய­டைய வேண்டும்.
முன்­னைய ஆட்­சியில் இடம்­பெற்­ற­தாக முன்­வைக்­கப்­பட்­டுள்ள போர்க்­குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் ஆதா­ரங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. அதேபோல் வெளி­நாட்டு ஊட­கங்கள் ஆவ­ணங்­க­ளையும், புகைப்­ப­டங்­க­ளையும் தொடர்ச்­சி­யாக முன்­வைத்து வரு­கின்­றன.
ஆனால் இந்தக் குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் மஹிந்த தரப்­பினர் இது­வ­ரையில் எந்­த­வொரு கார­ணங்­க­ளையும் முன்­வைக்­க­வில்லை. இலங்கை இரா­ணுவம் தொடர்பில் சுமத்­தப்­பட்­டு­வரும் குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் எமது இரா­ணு­வத்தை நியா­யப்­ப­டுத்தி காப்­பற்ற வேண்­டிய முக்­கிய பொறுப்பு அர­சாங்­கத்­தி­டமே உள்­ளது. ஆனால் மஹிந்த அர­சாங்கம் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் அவ்­வா­றா­ன­தொரு நட­வ­டிக்­கையை மேற்­கொள்­ள­வில்லை.
அதேபோல் மேற்­கத்­தேய நாடு­களின் எதி­ரி­களை ஆத­ரித்­தமை இலங்கை மீது சர்­வ­தேசம் அழுத்தம் செலுத்த காரணம் எனவும் நாட்டை இவர்கள் பங்­கு­போ­டு­வ­தா­கவும் மஹிந்த மற்றும் மஹிந்த ஆத­ரவு தரப்­பினர் முன்­வைக்கும் கார­ணங்­களை நாம் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள மாட்டோம். அமெ­ரிக்­காவும், பிரித்­தா­னி­யாவும் எப்­போதும் இலங்­கைக்கு உதவும் நோக்­கத்­தி­லேயே செயற்­ப­டு­கின்­றன.
அதேபோல் அமெ­ரிக்கா ஆத­ரிக்­காத நாடு­க­ளுடன் இலங்கை நட்­பு­றவை பேணுவதனால் அவர்கள் எம்மை எதிர்க்­க­வேண்­டிய அவ­சி­யமும் இல்லை. மேற்­கத்­தேய நாடுகள் இலங்­கைக்கு அழுத்தம் கொடுக்க பிர­தான காரணம் மனித உரிமை மீறல்­க­ளே­யாகும். மனித உரிமை மீறல்கள் விட­யத்தில் அர­சாங்கம் சரி­யாக நடந்­தி­ருந்தால் எமக்கு இவ்­வா­றா­ன­தொரு அழுத்தம் ஏற்­பட்­டி­ருக்­காது.
நாட்டில் ஜன­வரி மாதம் மாற்றம் ஒன்று ஏற்­பட்­டி­ருக்­கா­விடின் இப்­போது எமக்கு எதி­ரான விளை­வுகள் மிக மோச­மா­ன­தா­கவே அமைந்­தி­ருக்கும். பொரு­ளா­தார ரீதி­யிலும், ஏனைய பாது­காப்பு ரீதி­யிலும் எமக்கு எதி­ரான அழுத்­தங்கள் அதி­க­ரித்­தி­ருக்கும்.
ஒரு­வேளை தொடர்ந்தும் மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியில் இருந்­தி­ருந்தால் அவ்­வா­றான நிலையில் ஐக்­கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பில் தீர்­மானம் முன்­வைக்கப் பட்­டி­ருக்­கு­மாயின் இன்று நாட்டின் நிலைமை என்­ன­வாகும். ஆனால் ஆட்சி மாற்­றத்தின் பின்னர் எமது அர­சாங்கம் முதற்­க­ட­மை­யாக யுத்த குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் சர்­வ­தேச மட்­டத்தில் எமது இரா­ணு­வத்தை கொண்­டு­செல்லும் செயற்­பாட்டில் இருந்து காப்­பாற்­றி­யுள்­ளது.
ஐக்­கிய நாடுகள் பேர­வை­யிலும் இலங்கை மீது சுமத்­தப்­பட்­டுள்ள மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பிலும் எமது அர­சாங்கம் சரி­யான முறையில் குற்­றச்­சாட்­டு­களை நிவர்த்தி செய்யும் வகை­யிலும் சர்­வ­தே­சத்­தையும் திருப்­திப்­ப­டுத்தும் வகையிலும் கையாண்டுள்ளோம்.
ஆகவே இது எமக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். இப்போது நாம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் முழுமையாக உள்நாட்டு பொறிமுறைகளை மையப்படு த்தியே அமைந்துள்ளது. அதேபோல் சர்வதேச உதவிகளையும் பெற்று ஒரு பூரணமான விசாரணையாகவே அமைந்துள்ளது. ஆகவே இதில் யாரும் முரண்படவேண்டிய அவசியம் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *