Breaking
Mon. May 20th, 2024
– A.R.A.பாரீல் –
இஸ்ரேல் பலஸ்­தீன் மக்கள் மீது மேற்­கொள்ளும் அட்­டூ­ழி­யங்­க­ளையும் அல் அக்ஸா பள்­ளி­வாசல் முற்­று­கை­யையும் வன்­மை­யாக  கண்­டிப்­ப­தாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார்.
இலங்கை இஸ்ரேல் இரா­ஜ­தந்­திர உற­வுகள் முஸ்­லிம்­களின் மனதைப் புண்­ப­டுத்­து­மாயின் அதனை தான் விரும்­ப­வில்லை எனவும் அவர் கூறினார்.
பலஸ்தீன் மீதான இஸ்­ரேலின் ஆக்­கி­ர­மிப்பு மற்றும் இலங்கை இஸ்ரேல் உறவு தொடர்பில் வின­வி­ய­ போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரி­விக்­கையில்,
முஸ்லிம் நாடுகள் எப்­போதும் இலங்­கை­யுடன் நல்­லு­ற­வையே பேணி­வந்­துள்­ளன. இலங்­கைக்கு எதி­ராக ஜெனி­வாவில் கடந்த காலத்தில் கொண்டு வரப்­பட்ட பிரே­ர­ணையின் போது முஸ்லிம் நாடுகள் இலங்­கைக்கு ஆத­ரவு தெரி­வித்தே வாக்­க­ளித்­தன.
இலங்கை பலஸ்­தீ­னர்­களின் நட்பு நாடாகும். எனது ஆட்சிக் காலத்தில் பலஸ்­தீன ஜனா­தி­பதி எமது நாட்­டுக்கு நல்­லெண்ண விஜ­யத்­தினை மேற்­கொண்டார். நானும் பலஸ்­தீ­னத்­துக்கு விஜயம் செய்­துள்ளேன். இதன் மூலம் இரு நாடு­க­ளுக்­கி­டை­யி­லான உற­வுகள் வலுப்­பெற்­றன.
பலஸ்­தீன மக்­களின் உரி­மை­க­ளுக்­காக ஐக்­கிய நாடுகள் சபைக் கூட்டத் தொடர்­களில் நான் குரல் கொடுத்­தி­ருக்­கிறேன். தொடர்ந்தும் பலஸ்­தீன மக்­களின் உரி­மை­க­ளுக்­காக குரல் கொடுப்பேன்.
பலஸ்­தீன மக்­க­ளதும் முஸ்­லிம்­க­ளதும் நண்­ப­னான என்னை முஸ்­லிம்­க­ளி­லி­ருந்தும் சதி செய்து பிரித்­தெ­டுத்­தார்கள். காலப்­போக்கில் உண்மை நிலையை உணர்ந்து முஸ்­லிம்கள் மீண்டும் எம்­முடன் இணை­வார்கள்.
எமது நாடு பொருளாதார நெருக்கடிக்குள்ளான சந்தர்ப்பங்களில் முஸ்லிம் நாடுகள் எமக்கு வழங்கிய உதவிகளை மறக்க முடியாது என்றார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *