Breaking
Wed. Apr 17th, 2024

-இப்னு ஜமால் –

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன், இலங்கை முஸ்லிம்களின் ஏகபிரதிநிதியாக செயற்பட்டுவருவதை அரவது துணிச்சல் மிக்க  முன்னெடுப்புக்கள் கட்டியம் கூறுகின்றன.

அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்களின் குரல் வளைகள் எங்கெல்லாம் நசுக்கப்பபடுகின்றதோ அங்கெல்லாம் ஓங்கி ஒலித்த ரிசாத் பதியுதீனின் குரல் இன்று சர்வதேசத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளமை இதற்கு சாண்றாக அமைந்துள்ளது.

இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் செலயலாளர் நாயகம் பாங்கி மூனை ரிசாத் பதியுதீன் சந்தித்து மகஜர் கையளித்தமையானது இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் மீது சர்வதேசத்தின் பார்வையை அடுத்;த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது.

இலங்கை முஸ்லிம்களை பிரதிநித்துவப்படுத்தி 18 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 06 அமைச்சர்கள் 01 முதலமைச்சர் இருந்தும் இவர்களால் முடியாமல் போன விடயத்தை தன்னந்தனியாக இருந்து ரிசாத் பதியுதீன் சாதித்துக் காட்டடியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரின் பயணமானது ஏற்கனவே திகதி குறிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களையே கொண்டிருந்தன. இவைகளில் முஸ்லிம் அரசில் பிரதிநிதிகளையோ கல்வியலாளர்களையோ விசேடமாக சந்திப்பதற்கான எவ்விதமான ஏற்பாடுகளை இவரது நிகழ்ச்சி நிரல் உள்ளடக்கியிருக்கவில்லை.

ஜனாதிபதி , பிரதமர், சபாநாயகர், முக்கிய அமைச்சர்கள் மற்றும் தமிழ் தலைமைகளை சந்திப்பதற்கான ஏற்பாடுகளே காணப்பட்டிருந்தன.

இவ்வாறு பாங்கி மூனின் இறுக்கமான சந்திப்புக்களுக்கு மத்தியில் அமைச்சர் ரிசாத் எடுத்த விசேட முயற்சியும் அவரது அயராது உழைப்பும் இங்கு எடுத்துக் கூறப்பட வேண்டியுள்ளது.

ஏனெனில் பாங்கி மூனின் விஜயம் தொடர்பில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவையும் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளையும், பாங்கி மூனின் விஜயம் தொடர்பில் இலங்கையில் நியமிக்கப்பட்டிருந்த விசேட பிரதிநிதியையும் தனிப்பட்ட ரீதியில் சந்திப்புக்களை மேற்கொண்டு பாங்கி மூனிடம் முஸ்லிம்கள் சார்பாக பேசுவதற்கு அவர் எடுத்த முயற்சி இன்று முஸ்லிம் கல்வியலாளர்களினால் பாராட்டலுக்குள்ளாகியுள்ளது.

அரசியல் தலைமைக்கு அரசியல் சாணக்கியம் அவசியம் வேண்டும். சொற்களில் சாணக்கியம் என்று முழங்கும் சாணக்கியம் அல்ல அது. அமைதியாக இருந்துவிட்டு காரியத்தை சாதிக்கும் தலைமைத்துவப் பண்பு வேண்டும். அதனையே ரிசாத் இன்று மேகொண்டிருக்கின்றார்.

ஏனைய அமைச்சர்களுடன் கூட்டத்தோடு சேர்ந்து பாங்கி மூனை சந்தித்த வட்டத்திற்குள் நில்லாமல் ரிசாத் முஸ்லிம்களை முன்னிலைப்படுத்தி பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்துள்ளார்

தன்னுடைய முழு அளவிலான அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி பாங்கி மூனை  முஸ்லிம்களின் தனித் தரப்பாக சந்திந்தித்தமையானது இன்று இலங்கை அரசியல் வாதிகளேயே மூக்கின் மேல் விரலை வைக்க வைத்துள்ளது.

பாங்கி மூனை சந்திப்பதற்கு முஸ்லிம் தலைமைகள் முயற்சி எடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தக் காத்துக் கொண்டிருந்த தமிழ் தலைமைகளும் சிங்கள இனவாதிகளும், இதர முஸ்லிம் கட்சிகளும் ரிசாதின் செயற்பாட்டினால் மூக்குடைந்து போயுள்ளார்கள்.

பாங்கி மூனை சந்தித்த ரிசாத், முஸ்லிம்கள் தொடர்பில் மிகவும் சிறப்பாக வரையப்பட்ட ஒரு மகஜரை கையளித்துள்ளார். அதில் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றப்பிரச்சினைகள், யுத்த காலத்தில் கிழக்கு முஸ்லிம்கள் மீது புரியப்பட்ட படுகொலைகள், கிழக்கு காணிப்பிரச்சினைகள் மற்றும் அண்மைக்காலமாக தெற்கு முஸ்லிம்களுக்கும் பள்ளிவாசல்களுக்கும் ஏற்படுத்தப்பட்டு வருகின்ற தாக்குதல்கள் – மனித உரிமை மீறல்கள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இச்செயற்பாட்டின் மூலம் சர்வதேசத்தின் பார்வை இலங்கை முஸ்லிம்கள் மீது திரும்புவதற்கு அமைச்சர் ரிசாத் வழியை ஏற்படுத்தியுள்ளார்.

அமைச்சர் என்ற முறையில் தனக்கு கிடைக்கும் அமைச்சர் அந்தஸ்தையும் சுகபோகத்தையும் அனுபவிக்காமல் தினமும் சமுகத்தை பற்றி சிந்திக்கும் ஒரு தலைமகனால் தான் இவ்வாறான முன்னெடுப்புக்களை மேற்கொள்ள முடியும்.

இதற்கு சிறந்த உதாரணம் எமது மறைந்த மாமனிதர் தலைவர் அஸ்ரப் ஆகும். அவர் எதனையும் தூரநோக்கோடு பார்ப்பவர். முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் உள்நாட்டில் பேசிக் கொண்டிராமல் அப்பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்த வேண்டும் என்பதில் அக்கறையோடு செயற்பட்டவர்.

குறிப்பாக யுத்தகாலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளை லிபிய தலைவர் – கடாபி, பலஸ்தீன் தலைவர் யசீர் அறபாத், ஈராக் தலைவர் சதாம் ஹூஸைன் மேலும் பல நாடுகளின் வெளிநாட்டு தூதுவர்களையும் இராஜதந்திரிகளையும் சந்தித்து வெளிப்படுத்தி வந்தார். அத்துடன் அவர்கள் மூலம் பல உதவிகளையும் முஸ்லிம்களுக்கு பெற்றுக் கொடத்துள்ளார்.

எம்மை விட்டு பிரிந்த அத்தலைமை செய்த வேலையைத்தான் இன்று ரிசாத் செய்து வருகின்றார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் சையட் அல் ஹூஸைன் இலங்கை வந்த போது முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் இங்கு இருக்கவில்லை. அதற்கான நேர ஒழுங்குகள் முன்னரே மேற்கொள்ளப்பட்டதினால் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் மறைமுகமாக புறக்கணிக்கப்பட்டிருந்தனர்.

ஹூஸைன் இலங்கை வருகின்றார் என்ற தகவல் ஏற்கனவே பல மாதங்களுக்கு முன்னர் தெரிந்திருந்தும் கூட முகா தலைவர் ரவூப் ஹக்கீம் துருக்கிக்கு உல்லாச பயணம் சென்றுவிட்டார்.

இந்த நேரம் பார்த்து தானும் முஸ்லிம்களை கைவிட்டு விட்டு செல்லாமல் ரிசாத் களத்தில் நின்ற உண்மை எமக்கு எத்தனைபேருக்கு வெளிப்படையாக தெரியும்.

வெளியேற்றப்பட்டிருந்த வடக்கு முஸ்லிம்களின் ஒரு பகுதியினரை கொழும்பில் உள்ள ஐ.நா காரியாலத்திற்கு வரவழைத்து தங்களது பிரச்சினைகளை சர்வதேசம் கருத்தில் கொள்ள வேண்டும் என சிறு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு பக்கபலமாக ரிசாத் இருந்தார். ரவூப் ஹக்கீம் நாட்டைவிட்டு துருக்கிக்கு பயணிக்க தனித்து விடப்பட்டிருந்த ரிசாத் முஸ்லிம்களுக்காக தனிமையில் குரல் கொடுத்தார்.

இவரின் சமுக அக்கறையானது காலத்திற்கு காலம் முஸ்லிம்களுக்காக துணிவுடன் வெளிக்காட்டப்பட்டு வருகின்றது. அளுத்கமையில் முஸ்லிம்கள் தாக்கப்பட்ட போது அப்போதைய ஜனாதிபதியுடன் காரசாரமான விவாதத்திலும் ஈடுபட்டிருந்ததை நாம் இலகுவில் மறக்க முடியுமா? ரிசாதின் கோபத்தை கட்டுப்படுத்துவதற்காக ஒரு கட்டத்தில் ரிசாதுக்கு அடிப்பதற்காக மகிந்த ராஜபக்ச தான் உட்காந்திருந்த கதிரையை தூக்கியமையையானது ரிசாதின் சமுகப் பற்றைய பறைசாற்றுகின்றது.

ஏன் நேற்று முன்தினம் (31) அமெரிக்க தூதுவரை ரிசாத் பிரத்தியேகமாக சந்தித்த போது இலங்கை முஸ்லிம்கள் மீதான மனித உரிமைகள் தொடர்பில் எடுத்துரைத்திருந்தார்.

இவ்வாறு தன்னால் முடியுமானவைகளையும் சில நேரங்களில் சில முஸ்லிம் தலைவர்களால் செய்ய முடியாது என ஒதுங்கிய காரியங்களையும் ரிசாத் செய்து முடித்து வருகின்றார்.

ஒரு சாதாரண எம்.பி யாகி பின்னர் அமைச்சராகி, பின்னர் கட்சியை அமைத்து அதன் தலைவராகி, பின்னர் வடக்கு கிழக்கு மட்டுமன்றி அதற்கு வெளியிலிருந்தும் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் பெற்று இன்று முஸ்லிம் சமுகத்தை வழி நடத்தும் ஏக பிரதிநிதியாகவும் சிறந்த வழிகாட்டடியாகவும் செயற்படுதவற்கு காரணம் அவரது முஸ்லிம் சமுகத்தின் மீதான சமுக அக்கறையே ஆகும்.

நாம் விரும்பியோ விரும்பாமலோ ஒரு விடயத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அது ரிசாத் என்ற தலைமகனின் தலைமைத்துவ பண்புகளையும் அவரது வழிகாட்டலையும்.

முஸ்லிம் சமுகம் படுபாதாளத்தில் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் இக்கட்டான இந்நேரத்தில் முஸ்லிம்களின் விடயங்களில் அதிக அக்கறையோடு செயற்பட்டு வரும் ரிசாத் பதியுதீனுக்கு கட்சி பேதம் மறந்து அவரின் செயற்பாடுகளுக்கு பக்கபலமாக கரம் கொடுப்பது நமது கடமையாகும்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *