Headlines

‘பிராந்திய தேவைகளில் இணைந்து செயற்படும் நம்பிக்கை பிறந்துள்ளது’ – ஆளுநர்களுக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வாழ்த்து!

பிராந்திய நலன்களிலும், பிரதிநிதித்துவம் செய்யும் மக்களின் நோக்குகளிலும் இணைந்து செயற்படுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் புதிய ஆளுநர்களை வாழ்த்தி அவர் வெளியிட்டுள்ள  செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “வடக்கு, கிழக்கு மாகாணங்களின் புதிய ஆளுநர்களான திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் சிறுபான்மை சமூகங்களின் பூர்வீகத்திலுள்ளவர்கள். இதனால், எமது மக்களின் அபிலாஷைகள் பற்றி புதிதாக இவர்களுக்கு எதையும் சொல்ல வேண்டியதும் இல்லை….

Read More

இனவாதம் இன ஒற்றுமையை வலியுறுத்துகிறதா?

-M.M.A.Samad – இந்நாடு எல்லோருக்கும் சொந்தம் என்ற மனப்பாங்கு எல்லோரிடமுமில்லை. இந்நாட்டில்; பெரும்பான்மையாக பௌத்த – சிங்கள மக்களே வாழ்கின்றனர் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. அதற்காக ஏனையவர் வந்தேறு குடிகளல்ல. அவர்களும் ஆண்டாண்டு காலமாக இம்மண்ணை நேசித்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்;. இத்தேசத்தைக் கௌரவப்படுத்தியவர்கள். அவர்களால் இத்தேசம் மாண்பு பெற்றிருக்கிறது. இதனால், இந்நாட்டுப் பிரஜைகள் என எவரெவரெல்லாம் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் இந்நாட்டின் சொந்தக்காரர்கள். இந்நாடு அவர்களுக்கும் சொந்தம். அவர்கள் அனைவரும் சகல உரிமைகளும் பெற்று இம்மண்ணில் வாழ்வதற்கு…

Read More

மீளக்குடியேறிய முஸ்லிம்களுக்கு மீண்டும் பேரிடி

-K.C.M.அஸ்ஹர் (முசலியூர்)- நல்லாட்சியில் முஸ்லிம்கட்கு தொடராக அடிவிழுவதை அவதானிக்க முடிகிறது. மகிந்த யுகத்தில் முஸ்லிம்கட்கு அநியாயம் நடைபெறுவதாகவும், இதனை அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் கூறியே முஸ்லிம் மக்களும்,முஸ்லிம் தேசியத்தலைவரும் அரசைவிட்டு வெளியேறி மகிந்த யுகத்தை அஸ்தமிக்கச் செய்து மைத்திரி யுகத்தை ஆரம்பித்து வைத்தனர்.தமது பிரச்சினைகள் இலகுவில் தீரும் எனக் கண்ட கனவுகள் யாவும் கலைவதைக் காணமுடிகிறது. எந்த பலசேனாக்களின் அறிக்கைகளாலும், அடாவடித்தனங்களாலும் மகிந்த அரசைவிட்டு வெளியேறவேண்டிய நிலைமை ஏற்பட்டதோ, அதே பலசேனா முன்னரைவிட பலமாக தமது செயற்பாட்டைச்…

Read More

கர்பலாவில் பீபி ஜெயினப் அவர்களின் வீர முழக்கம்

இஸ்லாமிய அரசியல் வரலாற்றில் “குலபாயே ராசிதீன்களின்” ஆட்சியின் பின் வந்த உமையாக்களின் ஆட்சியில் முஆவியா (ரழி) அவர்களின் மகன் யஸீத், மக்களின் அங்கீகாரம் பெறாத, ஒழுக்கங்கெட்ட மன்னனாக இருந்ததால், பெருமானார் (ஸல்) அவர்களின் பேரன் குசைன்  (ரழி) அவர்கள் யஷீதிற்கு பையத் சத்தியப்பிரமாணம் செய்ய மறுத்து விட்டார்கள் . குசைனின் அங்கீகாரம் இல்லையென்றால் மக்களின் அங்கீகாரம் கிடைக்காமல் போய், அது மக்கள் கிளர்ச்சிக்கு வழிவகுக்கும் என அஞ்சியதால் குசைனை எப்படியாவது அடக்கிப்பிடிக்க முயன்றபோது, ஈராக் நாட்டின் யுபிரடீஸ்-டைகிரீஸ்…

Read More

வரலாற்றை தொலைக்கும் முஸ்லிம்கள்

இலங்கை முஸ்லிம்களை அவதானிக்கும்பொழுது சமூகத்துக்காக செய்தது என்ன என நினைக்க தோணுகின்றது. ஒரு சமூகம் முழுமைபெற்று திகழ வேண்டுமாயின் அரசியல் துறை, ஆண்மீக துறை, கல்வி, கலாச்சாரம், பண்பாடு, பொருளாதாரம் இன்னும் அனைத்து துறைகளிலும் முன்னேறி செல்ல வேண்டும். ஒரு சமூகத்தின் அடையாளமான வரலாறு என்பது முஸ்லிம்களுக்கு ஆவணங்கள் வடிவில் இருப்பதாக தெரியவில்லை. இவ்வாறு ஆவணமாக இருக்கும் பட்சத்தில் அதனை மறுப்பதற்காகவேனும் பிற சமூகத்தவர்களை தேடிக்கற்றுக்கொள்ள வழிசமைக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு. முஸ்லிம்களுக்கு இலங்கையில் பூர்வீகம் உள்ளது…

Read More

படுகுழியில் விழப்போகும் மஹிந்த

-M.I.முபாறக் – அரசியல் தீர்வு மற்றும் யுத்தக் குற்ற விசாரணை போன்ற தேசிய பிரச்சினைகளை விடவும் ஜனாதிபதி மைத்திரிக்கு தலையிடியாக இருப்பது மஹிந்த தரப்பின் கூத்துத்தான். சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவப் பதவியைக் கைப்பற்றுதல் அல்லது அக்கட்சியைப் பலவீனப்படுத்தி புதிய கட்சி ஒன்றை உருவாக்குதல் என்ற நோக்கில் அவர்கள் செயற்படுவதே இதற்கு காரணம். சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவப் பதவியைக் கைப்பற்றுவது முடியாத காரியம் என்றாலும் புதிய கட்சி ஒன்றை உருவாக்குதல் என்பது சாத்தியமே.அவ்வாறு புதிய கட்சி ஒன்று உருவாகும்போது…

Read More

அறபா தினத்தின் முக்கியத்துவம்!

சுவர்க்கத்திலிருந்து உலகிற்கு அனுப்பப்பட்ட ஆதம் (அலை) அவர்களும், ஹவ்வா (அலை) அவர்களும் முதல் முதலாக சந்தித்த இடம் அறபா. இதனால்தான் இந்த இடத்திற்கு அறபா என்று பெயர் சொல்லப்படுகின்றது. வேறு பல கருத்துக்கள் இருந்த போதும் இக்கருத்தே பிரபல்யமாக கூறப்படுகின்றது. அறபா நாள் என்பது சங்கையான நான்கு மாதங்களில் உள்ள துல் ஹிஜ்ஜா மாதமாகிய ஒன்பதாம் நாளைக் குறிக்கும். இஸ்லாமிய வரலாற்றில் மிகச் சிறந்த நாளாகிய இந்நாள்தான் அறபா தினமாகும். அன்றைய நாளில்தான் ஹாஜிகள் அறபா எனும்…

Read More

குர்திஸ்களின் சுயாட்சியை தடுக்க சிரியாவுக்குள் நுழைந்தது துருக்கி

-எம்.ஐ.முபாறக் – ஐந்து  வருடங்களாக முடிவின்றித் தொடரும் சிரியா யுத்தம் சுமார் 4 லட்சம் உயிர்களை பறித்துள்ளது. யுத்த நிறுத்தம் என்ற ஒன்று அங்கு நடைமுறையில் இருக்கின்றபோதிலும், அது அப்பாவி உயிர்கள் பறிக்கப்படுவதைத் தடுக்கவில்லை. அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான யுத்தம் பெயரளவில் முடிவுக்கு வந்துள்ளபோதிலும், அரசுக்கும் ஐ.எஸ் மற்றும் அல்-கைதா போன்ற ஆயுதக் குழுக்களுக்குமிடையிலான யுத்தம் தொடர்கின்றது. இந்த நிலைமையால் அப்பாவி மக்களின் உயிர்கள் இலக்கு வைக்கப்படுகின்றன.  இந்த ஆயுதக் குழுக்களை நசுக்குகின்றோம் என்ற பெயரில் சிரியா…

Read More