Breaking
Mon. Apr 29th, 2024

மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தக நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் (12.07.2016 செவ்வாய்கிழமை) அமைப்பின் தலைவர் கே.எம்.எம்.கலீல்(பிலால் ஹாஹி) தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இன ஒற்றுமைக்கான நோன்பு பொருநாள் இரவு நேர ஒன்று கூடல் மற்றும் இராப்போசன நிகழ்வு மட்டக்களப்பு ரெஸ்ட்-இன் ஹோட்டலில் இடம் பெற்றது.

மதத் தலைவர்களை மதிக்கின்ற தன்மை மனிதர்களிடையே உருவாக வேண்டும் என கல்முனை சுபாத்ரா ராம விகாராதி பதி ரண்முத்தகல சங்கரத்ன தேரர் தெரிவித்தார்.;

மத்தலைவர்கள் மூலம்தான் அந்தந்த இனத்தவர் தங்கள் மத விடயங்களை கற்றுக் கொள்ள முடியும் அவர்கள் இல்லாமல் மதவிடயங்களை இலகுவில் கற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தக நலன்புரி அமைப்பினர் இன்று ஏற்பாடு செய்திருக்கின்ற இந்த நிகழ்வானது முழு நாட்டுக்கும் ஒரு முன்னுதாரனமாகும் என குறிப்பிட்டார்.

பல் சமய தலைவர்களை அழைத்து அவர்களின் ஆசிகளைப் பெற்று நிகழ்வுகளை நடாத்துவது என்பது ஒற்றுமைக்கு மிகப் பெரிய எடுத்துக்காட்டாகும் எனக்குறிப்பட்டார்;. மனிதர்கள் மதத்தலைவர்களை மதிக்கின்ற தன்மை அதிகரிக்க வேண்டும். அதே நேரம் ஜாதி,மத,குல, பேதமின்றி மனிதர்களுடன் எல்லோரும் சிரித்த முகத்துடன் பேசிப்பழக வேண்டும் நேசிக்க வேண்டும்.

நான் விகாரைக்கு வரும் போது எனக்கு தமிழ் பேச தெரியாது. நான் தமிழ் பேசும் மக்களுடன் உண்டு உறவாடி அன்புடன் பேசி பழகியதனால்தான் இன்றுநான் முழுமையாக தமிழ் பேச கற்றுக் கொண்டேன் என ரண்முத்தகல சங்கரத்ன தேரர் தெரிவித்தார்.

சங்கரத்ன தேரரின் உரை முழுமையாக தமிழில் இடம் பெற்றதினால் சகலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட நான்கு மதத்தலைவர்களின் விசேட உரை மற்றும் அதிதிகளின் உரையும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தக நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டினில் இடம் பெற்ற இன ஒற்றுமைக்கான 8 வது வருடாந்த ஒன்று கூடலில் பல்சமய தலைவர்கள் சார்பில் கிரிஸ்தவ சமயம் சார்பாக மட்டக்களப்பு சிவில் சமூக தலைவரும்,கிழக்கு பல்கலை கழக சிரேஷ்ட்ட விரிவுரையாளருமான அருட்தந்தை கலாநிதி டோமினிக் சுவாமிநாதன் அவர்களும் , இந்த சமயம் சார்பாக பல்சமய ஒன்றியத்தின் இந்த சமய குருக்கள் குமாரஸ்தான தேவஸ்தானம் ஜெஹதீஸ்ஸ சர்மா குருக்கள் அவர்களும், இஸ்லாம் சார்பாக மருதமுனை தாருல் ஹூதா பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபர் கலாநிதி அஷ்ஷெய்ஹ் முகம்மது முபாறக் (மதனி) அவர்களும் கலந்து கொண்டனர்.

இன ஒற்றுமைக்காக வேண்டி கடந்த 7 ஆண்டுகளாக தனது சமூகப்பணியினை ஜாதி,மத,குல,பேதம் பாராது பணியாற்றிவரும் மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தக நலன்புரி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்டமான நிகழ்வினில் கிழக்கு மாகாண அமைச்சர் துரைராஜசிங்கம அவர்களும்;,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள்,அரச உயர் அதிகாரிகள்,கல்விமான்கள்,புத்தி ஜீவிகள்,வைத்திய கலாநிதிகள், சிவில் சமூக தலைவர்கள், பல்சமய ஒன்றியத்தின் தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *