Breaking
Sun. May 5th, 2024
ஜேர்மனியை நோக்கிச் செல்லும் அகதிகளுக்கு, உண்மையிலேயே அங்கு சுதந்திரமாக வாழ்வதற்க்கான வழிகள் செய்து கொடுக்கப்படுகிறதா அல்லது செய்து கொடுக்கப்படுமா? பல இணைய தளங்களில் இருந்து பெறப்பட்ட அதிர்ச்சித் தகவல்களை சுருக்கமாகத் தருகிறேன்.
ஐரோப்பிய நாடுகளில் அனுமதிக்கப்படும் அகதிகளுக்கு அங்கே வாழும் முழுச் சுதந்திரம் வழங்கப்படுமா என்று கேட்டால், இல்லை என்பதே பதிலாக அமையும். காரணம் அவர்கள் அங்கே தற்காலிகமாகத்தான் அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் அங்கு நிரந்தரமாக வாழ வேண்டுமென்றால் புகலிட (Asylum ) உரிமையைக் கோரி நீதிமன்றத்தில் பதிந்து, அந்த வழக்கில் வெற்றி பெற்றால் மாத்திரமே அவர்களுக்கு அங்கே வசிக்கும் உரிமை முழுமையாக வழங்கப்படும். அப்படி இல்லையென்றால் அவர்கள் எந்த நாடுகளிலிருந்து வந்தார்களோ அங்கே மீண்டும் திருப்பி அனுப்பப்படுவர். பொதுவாக எல்லா ஐரோப்பிய நாடுகளிலேயும் இதுவே கடைபிடிக்கப்படும்.
நான் இந்தப் பதிவினூடாக ஜேர்மனியில் அகதிகளுக்கு ஏற்படும் ஒருசில நெருக்கடிகளைச் சுட்டிக்காட்டலாம் என நினைக்கிறேன். ஜேர்மன் ஒரு ஊடக அறிக்கையில் (NO LIMIT TO REFUGEES WE WILL TAKE IN) எத்தனை அகதிகள் வந்தாலும் அவர்களை நாம் ஏற்றுக்கொள்வோம் என்ற தகவலை வெளியிட்டிருந்தது. உண்மையிலேயே நானும் இதைப் பார்த்துவிட்டு சந்தோஷப்பட்டேன். ஆனால் நேற்றைய (07.09.2015) தினம் சில இணையதளங்களில் ஜேர்மன் எதற்க்காக அதிகமான அகதிகளை அனுமதிக்கிறது என்பதற்க்கான காரணங்களை வெளியிட்டிருந்தன…
ஜேர்மனில் ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் சிரியா அகதிகள் குடியேறியுள்ளனர்/ குடியேறுகின்றனர். இவர்களில் 98 விகிதமானவர்கள் முஸ்லிம்களே. இஸ்லாத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் ஐரோப்பிய நாடுகளில் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது அல்லாஹு அக்பர். தங்களிடம் வரும் அகதிகளை, சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர்களை மதம் மாற்ற ஜேர்மன் அரசாங்கம் முயற்ச்சிப்பதாக அந்த இணையதளம் குறிப்பிடுகிறது.
இவ்வாறு மதம் மாற்றப்பட்ட ஒருவரைத் தான் கீழே உள்ள படத்தில் காண்கிறீர்கள். அவர் ஈரான் நாட்டைச் சேர்ந்த Mohammed Ali Zonoobi என்பவர். தற்போது அவரின் பெயர் Martin என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர் தனது மனைவி, இரு பிள்ளைகளுடன் ஐந்து மாதங்களுக்கு முன் ஜேர்மனுக்கு வந்துள்ளார். அவரின் மனைவியின் பெயர் Afsaneh. தற்போது அது Katarina என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. அவருடன் சேர்த்து நூற்றுக்கும் அதிகமான ஆப்கான், ஈரானைச் சேர்ந்த அகதிகள் தங்களை கிரிஸ்துவத்திற்க்கு ஜேர்மன் பெர்லினில் (Berlin) உள்ள Trinity Church இல் மாற்றிக்கொண்டுள்ளனர். நஊது பில்லாஹ்…
அவரின் மத மாற்றத்திற்க்கான காரணத்தை இவ்வாறு விளக்கியிருந்தார். தான் புகலிடன் (Asylum ) கோரி விண்ணத்திருப்பதாகவும் தான் கிறிஸ்தவன் என்று தெரிந்தால் கண்டிப்பாக தனக்கு புகலிடம் கிடைப்பதற்க்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். அதே போல் தன்னை நீதிமன்றம் புகலிடம் தராமல் நிராகரித்து, தனது நாட்டிற்க்கு (ஈரான் ) தன்னை திருப்பி அனுப்பினால் கொன்று விடுவார்கள் எனச் சொல்லி மீண்டும் மேல்முறையீடு செய்யலாம். அதனால் தான் தனது கையில் “Jesus ” எனப் பச்சை குத்தியிருப்பதாகவும் (Tattoo ) குறிப்பிட்டிருந்தார். அந்தப் படத்தையும் கீழே காணலாம்.
அதே போல் இன்னும் ஒரு முஸ்லிம் நபர், தான் நோர்வேயில் 2009 இல் மதம் மாறி அங்கே புகலிடம் கேட்டதாகவும், அதை நோர்வே அரசு நிராகரிக்க, தான் ஜேர்மன் நோக்கி வந்து மீண்டும் கிரிஸ்த்துவத்திற்க்கு மாரி, புகலிடம் கோரி தான் ஒரு நல்ல பதிலை எதிர்பார்த்திருப்பதாகக் கூறியிருந்தார்.
ஜேர்மனியில் இருக்கும் கிரிஸ்தவ பள்ளிகளான Lutheran Church , The Rhineland போன்றவற்றின் நிருவாகிகள், கடந்த வருடத்தில் அங்கே எத்தனை ஈரானியர்கள் மதம் மாறினார்கள் என்ற எண்ணிக்கையை சொல்ல முடியாத அளவிற்க்கு அங்கே மதம் மாற்றங்கள் நடந்ததாக கூறியுள்ளனர். மேலும் 80 க்கும் மேற்பட்ட ஆப்கான், ஈரானிய முஸ்லிம் அகதிகள் தங்களை மதம் மாற்றப் போவதாக தமது பெயர்களை முன் கூட்டியே பதிந்துள்ளதாக அறிவித்திருந்தனர்.
ஜேர்மனியில் தற்போது 4 மில்லியன் முஸ்லிம்கள் இருப்பதாகவும் அதில் 1/4 பகுதியினர் மதம் மாறியுள்ளதாக அதன் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கே உள்ள முஸ்லிம் பெண்கள் தங்கள் புகலிடத்தை உறுதி செய்து கொள்வதற்க்காக கிரிஸ்தவர்களை திருமணம் முடித்துக் கொள்வது ஒரு நவீன யுக்தியாக மாறியிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு தங்களது புகலிடங்களை உறுதி செய்து கொள்வதற்க்காக தங்களாலான இஸ்லாமிய மார்க்கம் அனுமதிக்காத எல்லா வழிகளையும் அந்த அப்பாவி மக்கள் செய்து, தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளக்கூடிய ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 8 இலட்சத்திற்கும் அதிகமான புகலிட மனுத் தாக்கல்கள் பதியப்பட்டிருப்பதாகவும், அதிலுள்ளவர்களில் 55 விகிதமானவர்கள் தங்களை மதம் மாற்றம் செய்ய வேண்டிய ஒரு நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அந்த இணையதளம் கூறுகிறது. நான் மேலே சொன்ன எண்ணிக்கையில் தற்போது புதிதாக ஜேர்மன் வந்துள்ள சிரியா அகதிகள் உள்ளடக்கப்படவில்லை.
இந்த அப்பாவி மக்களின் இந்த நிலைமைக்கு முழு உலக முஸ்லிம்களும் அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும். அல்லாஹ் என்னையும் உங்களையும் இவ்வாறன சோதனைகளில் இருந்து பாதுகாக்க வேண்டும். உங்களால் முடிந்தால் அவர்களுக்காக துஆ செய்து கொள்ளுங்கள்…. – IMRAN THAJUDEEN –

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *