Breaking
Fri. May 3rd, 2024

எமது சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க நாம் அரசியல் என்னும் ஆயுதத்தை நேர்மையாக பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் முஸ்லிம் பெண்கள் மத்தியில் நல்லொழுக்கத்துடன் கூடிய கல்வியினை உருவாக்குவது எமது அனைவரினதும் கடமையாகும் என்றும் கூறினார.

புத்தளம் பாத்திமா மகளிர் கல்லுாரியின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று (6) மாலை பாபடசாலை மண்டபத்தில் இடம் பெற்றது. பாடசாலை அதிபர் மாஹிரா தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் பாடசாலையின் பல துறைகளில் சாதனை படைத்த மாணவிகள் பாராட்டப்பட்டு பரிசும் வழங்கப்பட்டது. இங்கு மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தமதுரையில் –

கடந்த காலங்களுடன் பார்க்கின்ற போது முஸ்லிம் சகோதரிகளின் அரச நியமனங்கள் அதிகரிப்பினை காட்டுகின்றது.இதற்கு முக்கிய ஒரு தளமாக தென்கிழக்கு பல்கலைக்கழமும் அமைந்துள்ளது.இங்கிருந்து வெளியாகுகின்ற பெண்கள் பல துறைகளில் இன்று இருக்கின்றனர்.இஸ்லாமிய வரையறைக்குள் அவர்கள் செயற்பட வேண்டும்.

ஒழுக்கமில்லாத கல்வியும்,ஓழுக்கமில்லாத பதிவளும்,பட்ஙட்களும் ஒரு போதும் சமூகத்தின் விடிவுக்கு துணைாயக அமையாது.கற்கின்ற போது ஓழுக்கத்துக்கே நாம் முன்னுரிமையளிக்க வேண்டும் .
இன்று எமது நாட்டில் பல் துறை சார்ந்தவர்களை கணிப்பீடு செய்து பார்க்கின்ற போது முஸ்லிம் சமூகத்தின் உள்ளீரப்புக்கள் 3 சதவீதத்தையே கொண்டுள்ளது.இந்த நிலை மாற்றப்பட்டு கல்வியில் நாம் திறமை காட்ட வேண்டும்.துறைகளில் இருக்கும் எமது சகோதர்ரகளின் விகிதாசாரத்தை விட பன்மடங்கானவர்கள் சிறைச்சாலையில் வாழ்கின்றனர்.

புத்தளம் என்பது வடபுல முஸ்லிம்களின் வா்ழ்வில் என்றும் மறக்க முடியாத ஒரு பூமி,அன்று நாங்கள் வெளியேற்றப்பட்டுவந்த போது எமக்கு கரம்கொடுத்த மண்,மர்ஹூம் பிஸ்ருல் ஹாபி அவர்கள் குறிப்பிட்டு கூறக் கூடியவர்.அதே போால் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் நவவி அவர்களும்,ஏனைய சகோதரர்களும் ஆற்றிய பங்களிப்பு மிகவும் பெறுமதியானது.

புத்தளம் பாத்திமா பாடசாலையில் பல்வேறுபட்ட குறைபாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மத்திய அரசின் கல்வி அமைச்சர்,மற்றும் வடமேல் மாகாண கல்வி அமைச்சர் ஆகியோரை இந்த பிரதேசத்துக்கு அழைத்துவரவுள்ளோம்.கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களுடன் மாவட்டத்தில் உள்ள தமிழ் மொழி பாடசாலைகளின் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளோம்.

எமது சமூகத்தின் கல்வி நிலை மிகவும் பின்தங்கி காணப்படுகின்றது.அதனை மேம்படுத்த 5 வருட திட்டமொன்றினை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ளோம்.இதற்கான நாட்டிலுள்ள 448 தமிழ் தெமாழிப்பாடசாலைகளின் தரவுகள் பெறப்பட்டுவருகின்றது.அத்தோடு கல்வி பொதுத் தராதர சாதாரண தர மாணவர்களின் நலன் கருதி நாடு தழுவிய முறையில் இலவச செயலமர்வுகளை நடத்திவருகின்றோம் என்று கூறிய அமைச்சர் றிசாத் பதியுதீன் கற்றவர்களும்,துறை சார்ந்தவர்களும்,தனவந்தர்களும் முன்வந்து இந்த திட்டத்தை வெற்றிபெறச்செய்ய தங்களால் ஆன உதவிகளை வழங்க முடியும் என்றும் கூறினார். பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *