Breaking
Fri. May 17th, 2024

வட மாகாண முஸ்லிம் மக்கள் தொடர்பாக அதீத அக்கறை கொள்ள வேண்டும் என மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

கடந்த 5 ஆம் திகதி நடைபெற்ற வட மாகாண சபையின் 37 ஆவது மாதாந்த அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து கருதத்து தெரிவிக்கையில் வட மாகாண முஸ்லீம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் எதிர்கால மீள்குடியேற்றங்களும் என்ற ரீதியில் தனி நபர் பிரேரணையை முன்வைத்துள்ளேன்.

இம்மக்கள் 1990 ஆண்டு கட்டாயப்படுத்தப்பட்டு வெளியேறியதில் தங்கள் சொத்துக்களையும் நிலபுலன்களையும் இழந்து இன்று வரை சரிவர மீள்குடியமர்த்தப்படாமல் கஸ்டப்படுகின்றனர்.

இவர்கள் முன்னர் வாழ்ந்த பழைய நிலைமையை பெற்றுக்கொடுக்க வேண்டும்.அத்துடன் மீள்குடியேறியவர்கள் ,எதிர்கால சந்ததிகள் நிம்மதியாக வாழவும் வழிவகை செய்யப்பட வேண்டும்.2010 ஆண்டு 25 ஆயிரம் குடும்பங்களிற்கு மேல் மீள் குடியேற வந்த போதிலும் 7 ஆயிரம் குடும்பங்கள் மாத்திரமே குடியமர்த்தப்பட்டனர்.மிகுதி 18 ஆயிரம் குடும்பங்கள் 1990 ஆண்டு எங்கு அகதிகளாக சென்றிருந்தார்களோ மீண்டும் அங்கு போய் விட்டனர்.

இதற்கு காரணம் என்ன?அவர்களிற்கான எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் இல்லை.எனவே இவர்களையும் இன்னும் இம்மண்ணில் வாழ்ந்த தமிழ் ,சிங்கள மக்களையும் சகல வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இங்கு ஒரு குடும்பமாக சென்றவர்கள் பல குடும்பங்களாக தற்போது உள்ளனர்.இதனை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.அனைத்து அரசியல் வாதிகளும் தமிழ் பேசும் சகோதரர்களும் நிச்சயமாக இம்மக்களை மீள்குடியேற்ற ஒத்தழைக்க வேண்டும்.
தமிழ் மொழி பேசும் எமக்குள்ளே நிறைய தேவைகள் உள்ளன.

எனவே எம்மால் முடிந்த அளவிற்கு அனைவரும் ஒன்றினைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வுயரிய சபை மூலம் அனைத்து தேவைகளும் நிறைவேற்ற முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இத்தனி நபர் பிரேரணைக்கு வட மாகாண அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன்,உறுப்பினர்களாக அய்யூப் அஸ்மீன் ,சிவநேசன் ஆகியோர் தங்களது கருத்துக்களை முன்வைத்ததோடு பிரேரணையும் சபையில் நிறைவேற்றப்பட்டது.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *