Breaking
Fri. May 17th, 2024

ஜனாதிபதி மஹிந்த மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட் டியிட முடியுமா அல்லது இல் லையா என்பது குறித்து சட்ட ரீதியாக சர்ச்சை மூண்டுள்ள நிலை யில், அவருக்கு மீண்டும் ஜனாதி பதி தேர்தலில் போட்டி யிடுவ தற்கு சட்டரீதியான தகுதி இல்லை என்று பிரபல சட்டநிபுணர்கள் முன்வைத்துள்ள கருத்தினை தேர் தல்கள் ஆணையாளரிடம் சமர்ப் பிக்கவுள்ளதாக இலங்கை சட் டத்தரணிகள் சங்கம் தெரிவித் துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ மூன்றாவது தடவையாகவும் ஜனாதி பதித் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து பரிந்து ரைகளை முன்வைப்பதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விசேட நிபு ணர்கள் குழாமொன்றையும் அமைத்திருந்தது. இக்குழு ஜனாதி பதித் தேர்தல் குறித்த தமது நிலைப் பாட்டை நேற்று முன்தினம் மாலை வெளியிட்டது. இதனை அடிப்படை யாகக்கொண்டே சட்டத்தரணிகள் சங்கம் மேற்படி அறிவிப்பை வெளி யிட்டுள்ளன.
ஜனாதிபதித் தேர்தல் 2015 ஜனவரி முற்பகுதியிலோ அல்லது இவ்வருடம் இறுதிக்குள்ளோ நடத் தப்படக்கூடும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அரசின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. எனினும், ஜனவரியில் தேர்தல் நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் பங்காளிக் கட்சிகளிடம் கருத்து வெளியிட்டுள்ளார் ஜனாதிபதி மஹிந்த.

இந்நிலையில், அரசமைப்பின் பிரகாரம், மஹிந்த ­ மூன்றாவது முறையாக போட்டியிட முடியாது என்கின்ற சர்ச்சையை நாட்டின் சட்ட வல்லுநர்கள் கிளப்பு விட்டுள்ளனர். எனினும், அரசமைப்புக்கு மஹிந்த அரசு கொண்டுவந்த 18 ஆம் திருத்தத்தின் மூலம் அந்தத் தடை நீக்கப்பட்டுவிட்டது என்று அரச தரப்பினர் வாதிட்டுவருகின்றனர்.

குறிப்பாக மஹிந்த ராஜபக்­ இரண்டாம் தடவை பதவிப்பிரமாணம் செய்துகொண்ட சந்தர்ப்பத்திலேயே மூன்றாம் தடவையும் போட்டியிடுவதற்கான தகுதியை இழந்துவிட்டார் என்று அவருக்கு முதல் தடவை பதவிப்பிரமாணம் செய்துவைத்த முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட, ஆஸ்திரேலிய சட்டவல்லுநரும் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான சூரி ரத்னபாலவை அழைத்திருந்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், இந்த சட்ட ரீதியான குழப்பத்துக்கு விளக்கம் அளிக்குமாறு கேட்டிருக்கின்றது. இதன்படி கடந்த இரண்டு நாட்களாக இது தொடர்பில் ஆராயப்பட்டு வந்தது. இந்தக் கலந்தாய்வில் இலங்கையின் முக்கிய சட்டத்துறை, அரசியலமைப்பு நிபுணர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
(எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் ஒருவர் ஜனாதிபதி பதவி வகிக்கக்கூடியவாறு கொண்டுவரப்பட்ட) அரசியலமைப்பின் 18ஆம் திருத்தம் கடந்த காலத்துக்கு பின்நோக்கி ஆளும் தன்மை கொண்டது அல்ல என்று பேராசிரியர் சூரி ரத்னபால சுட்டிக்காட்டினார் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்தார்.

இலங்கையின் பொருள்விளக்கச் சட்டத்தின் பிரகாரமும் அரசமைப்புடன் தொடர்புடைய சட்டங்களை பின்நோக்கி, கடந்த காலத்தையும் ஆளும் விதத்தில் கொண்டுவர முடியாது என்றும் பேராசிரியர் விளக்கமளித்தார் என்றும் உபுல் ஜயசூரிய கூறியுள்ளார்.

பேராசிரியர் ஜயம்பதி விக்ரமரத்ன, பேராதனைப் பல்கலைக்கழக சட்டத்துறையின் தலைவி டாக்டர் தீபிகா உடகம, பேராசிரியர் சாவித்திரி குணசேகர, திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை தலைவர் டாக்டர் காமினா குணரத்ன உள்ளிட்ட இலங்கையின் சட்டநிபுணர்களும் ஆஸ்திரேலிய சட்டநிபுணர் சூரி ரத்நாயக்கவின் சட்ட விளக்கத்தையே இந்த கலந்தாய்வில் ஆமோதித்துள்ளனர்.
அதிகபட்சம் 12 ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக ஆட்சியில் இருப்பதற்கு மட்டுமே மஹிந்த ராஜபக்வுக்கு மக்கள் ஆணை வழங்கியிருக்கிறார்கள் என்பது தான் பிரபல சட்டநிபுணர்களின் கருத்து. இந்தக் கலந்துரையாடலில் மஹிந்த மூன்றாவது தடவையும் போட்டியிடமுடியும் என்பதற்கான விளக்கங்களை எந்தவொரு சட்டநிபுணரும் தெளிவாக முன்வைக்கவில்லை என்றும் உபுல் ஜயசூரிய கூறியுள்ளார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடத்தப்பட இருக்கின்றதா, அதில் மஹிந்த ராஜபக்­ போட்டியிடுவதற்கான சட்டரீதியான வாய்ப்புகள் உருவாகுமா என்பது அரச தரப்பின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளைப் பொறுத்தே அமையப் போகின்றது என அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *