Breaking
Fri. May 17th, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிக்கான வழிவகைகளை அறியாமல் ஆளுங்கட்சி அல்லாடிக் கொண்டிருப்பதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சார மற்றும் செயற்பாட்டு நடவடிக்கைகள் ஆளுங்கட்சியை விட முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்டு விட்டது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு, எதிர்க்கட்சியை திணறடிக்க நினைத்த அரசாங்கம் தான் வெட்டிய குழிக்குள் வீழ்ந்து, வெளியேற வழியறியாது தவிக்கின்றது.
காட்டாற்று வெள்ளத்தில் அடிபட்டுச் செல்பவனுக்கு வைக்கோலும் பெரும் மீட்புக் கருவியாக தென்படுவதைப் போன்று, அரசாங்கத்துக்கும் சிறிய விடயங்கள் கூட பாரியளவினதாகவே தென்படுகின்றது.
அதேநேரம் மக்கள் மத்தியில் அரசாங்கத்துக்கு நல்ல பெயர் எடுப்பது மிகவும் கடினமாக விடயம் என்பது உளவுத்துறை அறிக்கைகள் மூலம் அரசுக்குத் தெரிய வந்துள்ளது.
இதிலிருந்து வெளியேறுவதற்கான வழியாக ஆளுங்கட்சிக்கு ஆதரவான ஊடகங்கள் மூலம் தினந்தோறும் போலியான செய்திகளை உருவாக்கி, எதிர்க்கட்சிக்கு நெருக்கடிகொடுக்க அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.
அதிலும் சிங்கள மக்களின் வாக்குகள் எதிர்க்கட்சிக்கு அளிக்கப்படுவதைத் தடுக்க புலிகள் அமைப்புடன் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியிடப்பட வேண்டும் என்து ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள அறிவுரையாகும்.
இதன் ஒரு கட்டமாகவே விடுதலைப் புலிகளுடன் தொடர்பு, தனிநாட்டுக் கோரிக்கையை அங்கீகரித்து விடுவார் என்றெல்லாம் ரணிலைப் பற்றி போலியான தகவல்கள் ஊடகங்களில் பரப்பப்படுகின்றன.
ஆனாலும் விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது கைப்பற்றப்பட்ட அப்பாவி மக்களின் பணத்தில் 2010ம்ஆண்டு ஜனாதிபதித் தேர்தலையும், கே.பி. மூலம் சுருட்டிய விடுதலைப் புலிகளின் பணத்தில் 2014ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் செலவையும் சமாளிக்கும் மஹிந்த தான் இரண்டு இனங்களுக்கும் துரோகம் செய்தவர் என்ற உண்மை சாமர்த்தியமாக மறைக்கப்பட்டு விடுகின்றது.
ஏனெனில் இந்த உண்மையை மறைப்பதற்கு துணை போகும் காரணத்தினாலேயே நாய்க்கு போடும் எலும்புத்துண்டு போன்று ஊடகங்களின் பிரதானிகளுக்கும் சிற்சில சலுகைகளை அரசாங்கம் வழங்கி வருகின்றது என்றும் சிங்கள இணையத்தளத்தின் செய்தியில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *