Breaking
Thu. May 2nd, 2024

ரஸீன் ரஸ்மின்

எதிர்வரும் 10ஆம் திகதி அல்லது அதற்கு அடுத்துவரும் வாரங்களில் பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புடன் அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது.

எனவே, நல்லாட்சியை நோக்கி செல்லும் இந்த புதிய அரசு ஆட்சியமைக்கும் காலத்தில் வன்னி முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்ற ஆதங்கம் வன்னி முஸ்லிம்களின் உள்ளத்தில் இருந்தாலும் அடுத்த புதிய அரசாங்கத்திலாவது தமது எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் வன்னி முஸ்லிம்களும் பொதுத் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

வுன்னி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் நோக்கில் திட்டமிட்டு தாம் நினைத்தவாறு தங்களது கையிலுள்ள ஊடகங்களைப் பயன்படுத்தி , நினைத்தவாறு ஆடுகின்ற இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு இந்த புதிய அரசு கூட தலைசாய்த்துள்ளதை அண்மைக்கால செயற்பாடுகளில் இருந்து எங்களால் அவதானிக்க முடிகிறது.

இன்று வன்னி முஸ்லிம்கள் அரசியல் அதிகாரங்கள் இருந்தும் பலமிழந்தவர்களாக தமது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ள பல திசைகளிலும் போராட்டங்களை நடத்த வேண்டியவர்களாக இருக்கிறார்கள். காணிப்பிரச்சினை, வீட்டுப்பிரச்சினை, வாக்குரிமைப்பிரச்சினை என்று கடந்த இருபத்தி ஐந்து வருடங்களாக பிரச்சினைகளில் வாழ்ந்த முஸ்லிம் சமூகத்தின் பிரச்ச்pனைகளுக்கு எந்த அரசாங்கம்தான் முற்றுப்புள்ளி வைக்கும் என்ற ஆவலுடன் ஒவ்வொரு வருடத்தையும் வேதனையுடன் கடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நாட்டில் ஆட்சி செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அரசு, இந்த முஸ்லிம்களை எப்படி திட்டமிட்டு ஏமாற்றியதோ அதுபோல தற்போது ஆட்சி செய்கின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலமையிலான புதிய அரசு மீதும் வன்னி முஸ்லிம்கள் நம்பிக்கையிழந்து காணப்படுகிறார்;கள்.
மன்னார் வில்பத்து விவகார முதல் வன்னி முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் வரை அந்த மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்று அரசியலுக்கு அப்பால் இன்று பல சவால்களுக்கு தனிமனிதராக நின்று முகம்கொடுக்கின்ற அமைச்சர் ரிசாத் பதியுதீனுடன் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த அரிசியல்வாதிகள் ஒருமித்த கருத்தில் ஒன்றுபட்டிருக்கிறார்கள்.

மன்னார் வில்த்து விவகாரம் தொடர்பில் இன்று சிங்கள ஊடகங்கள் சிங்கள மக்கள் மத்தியில் மாத்திரமின்றி, அரசியல்வாதிகள் என பலரையும் இது உண்மையாக இருக்குமா என்று ஒரு நிமிடம் யோசிக்க வைக்கும் அளவுக்கு செய்திகளை தீயாக பரப்பி வருகின்றன.

அதுமாத்திரமின்றி, முசலிப்பிரதேச மக்களின் வாழ்வுரிமைக்கான போராட்டத்தில் அந்த மக்களினால் தெரிவு செய்யப்பட்ட அமைச்சர் ரிசாத் பதியுதீன் மீது தொடர்ச்சியாக பல குற்றச்சாட்டுக்களை இனவாத சக்திகள் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றன.

எனவே, கட்சி, அரசியலுக்கு அப்பால் மரிச்சிக்கட்டி முஸ்லிம்களின் காணிகளை மீட்டுக்கொடுப்பது, வன்னி முஸ்லிம்களை அவர்களது சொந்த மண்ணில் மீள்குடியேற்றம் செய்வது என்பனவற்றில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுபட வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.
தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் தமது மக்களின் பிரச்சினைகளை எப்படி சர்வதேசத்திடம் கொண்டு சென்று அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கிறார்களோ அதுபோல வன்னி முஸ்லிம்களின் பிரச்சினைகளை எங்கு கொண்டு சென்றாவது அந்த மக்களை நிம்மதியாக அவர்களது சொந்த மண்ணில் மீள்குடியேற்றுங்கள் என்பதே எமது கோரிக்கையாகும்.
ஆரசியல் அந்தஸ்து என்பது வெறுமனவே பாராளுமன்றம், உள்ளுராட்சி மன்றங்களின் கதிரைகளை அலங்கரிப்பதற்காக அல்ல. மாற்றமாக தெரிவு செய்து அரியாசனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கே என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஆவ்வாறு மக்களின் பிரச்ச்pனைகளை உரிய முறையில் பக்குவமாக நிறைவேற்ற முடியாமல் போனால் ஒதுங்கிக் கொள்வது கௌரவமாகும். இங்கு ஒதுங்கிக் கொள்வது என்றால் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு மக்களின் பிரச்சினைகளை நிறைவேற்றிக் கொடுக்க முடியாவிட்டால் பிறகு எதற்கு அந்த கௌரவ பெயரும், அரியாசனமும்.
வன்னி முஸ்லிம்களின் மீள்குடியேறற்மும், நல்லாட்சியும்
புதிய அரசு எங்களை அவசரமாக கௌரவமாக எமது சொந்த மண்ணில் மீள்குடியேற்றம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு இருந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஓர் ஏழைக் குடும்பத்திலிருந்து ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
எனவே, வன்னி முஸ்லிம்களின் பிரச்சினைகளை அவர் நன்கு அறிந்து வைத்திருக்கிறார். ஆவர் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டல் வன்னி முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சவாலுக்கு உள்ளாகாது என்ற ஓர் எதிர்பார்ப்பு.
இத்தனைக்கு மத்தியில்தான் எமது விரல்கள் நல்லாட்சியை நோக்கி சென்றதாக மன்னாரைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நம்பினோம். அவரும் மஹிந்தவைப் போல இனவாதிகளின் கருத்துகளுக்கு தலையாட்டிக்கொண்டிருப்பார் என்று கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை எனவும் அவர் கூறினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கலந்துகொண்ட இரு கூட்டங்களில் வில்பத்து காட்டுப்பகுதியின் கடழிப்பு தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்துக்களும், சுற்றாடல் அமைப்புக்கள் ஜனாதிபதிடம் கையளித்துள்ள வில்பத்து விவகாரம் தொடர்பிலான அறிக்கைகளும் மன்னார் மற்றும் வன்;னி முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையில் வில்பத்து பகுதியில் காடழிப்புபு இடம்பெற்றிருந்தால் அதுதொடர்பில் சட்டரீதியாக நீதிமன்றத்தின் ஊடாக அணுகுவதை விட்டுவிட்டு இனவாத ரீதியாக அந்த மக்களை நோவினை செய்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
மன்னார் மரிச்சிக்கட்டி கிராம மக்கள் பூர்வீகமாக அந்த பிரதேசங்களில் வாழ்ந்தமைக்கான நிறைய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதும் நாம் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று பேசிக்கொண்டிருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுபல சேனாவின் பேச்சுகளுக்கு தலையசைத்துக் கொண்டிருந்தது போல தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கள ராவய போன்ற கடும் போக்கு குணம் கொண்ட அமைப்புக்களின் பேச்சுக்கு தலையசைத்துக் கொண்டிருப்பாரானால் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் வெறுப்பை விரைவில் சம்பாதிக்க வேண்டி நேரிடும் என்பதை ஜனாதிபதி புரிந்துகொள்ள வேண்டும்.
ஒருபுறம் இனவாதிகளையும், மறுபுறம் தமக்கு ஆதரவு வழங்கியவர்களையும் சமாளிக்க வேண்டும் என்று மதிலுக்கு மேல் நின்றுகொண்டு தீர்ப்பு வழங்க வேண்டும் என நினைப்பது எந்த வகையில் நியாயமாகும்.
இந்த நல்லாட்சியும் வன்னி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு கைவிரித்துவிட்டால் இனி எந்த ஆட்சியில் தாம் சொந்த மண்ணில் மீள்குடியேற்றம் செய்யப்படுவோம் என்ற கேள்வியுடன் இருக்கிறார்கள் வன்னி முஸ்லிம்கள்.
இரண்டு இலட்சம் கையெழுத்துக்களை பெறும் முயற்சி
இதற்கிடையில் மன்னார் மரிச்சு;கட்டி முஸ்லிம்களின் காணிப்பிரரச்சினை மற்றும் வன்னி முஸ்லிம்களின் துரித மீள்குடியேற்றம் என்பவற்றை வலியுறுத்தி இரண்டு இலட்சம் கையெழுத்துக்களை பெற்று அதனை அறிக்கையூடாக ஜனாதிபதியிடம் ஒப்படைக்கும் முயற்சியொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த கையெழுத்து வேட்டை நாடுபூராகவுமுள்ள இரண்டாயிரம் பள்ளிவாசல்கள் ஊடாக பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
எனவே, இந்த முயற்சியையும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் உள்ளிட்ட குழுவினர் முன்னின்று செய்வதால் இதனையும் ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலாக பார்க்க வேண்டாம்.
இந்த கையெழுத்துக்கள் ஊடாக 25 வருடங்களாக கேள்விக்குறியாக மாறியுள்ள வன்னி முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் துரிதமாக இடம்பெறவேண்டும் என்பதே எல்லோரும் எதிர்பார்க்கும் விடயமாகும்.
ஏந்த விடத்திலும் நேர் மறையாக சிந்திக்க வேண்டும், எப்போதும் எதிர் மiறாக சிந்திக்க கூடாது. ஒரு விடயங்கள் முன்வைக்கப்படுகின்ற போது அதற்கு ஆலோசனை வழங்கும் ஒருவராக இருக்க வேண்டுமே தவிர, விமர்சனங்களை அள்ளி வைக்கும் ஒருவராக இருக்கக் கூடாது.
ஓவ்வnhருவரின் எண்ணங்களை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஆதற்கு ஏற்பவே கூலியும் கிடைக்கின்றன. எனவே, ஒருவர் நல்ல நோக்கத்திற்காக முன்னின்று செயற்பட்டால் அந்த நோக்கத்தை அல்லாஹ் வெற்றியடையச் செய்வான். பெயருக்கும், புகழுக்கும் என நினைத்துக்கொண்டு செயற்பட்டால் அதற்கு மாற்றமாகவே செயற்பாடுகளும் அமையும் என்பதை புரிந்துகொண்டு எதற்கும் உதவி செய்பர்களாகவே இருக்க வேண்டும்.
எனவே, வில்பத்து மற்றும் வன்னி முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் என்பவற்றில் எல்லா முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றுபட்டு அரசாங்கத்துடன் பேசி துரிதமாக தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். தயவு செய்து இந்த விடயத்தில் கட்சியை, அரசியலை உள்வாங்கி மக்களின் கௌரவமான மீள்குடியேற்றத்திற்கு ஒருபோதும் தடையை ஏற்படுத்தி விடாதீர்கள்.
வருகின்ற கருத்து முரண்பாடுகளை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். பபழிவாங்கும் குரோத எண்ணங்கள் ஒருபோதும் இருக்கக் கூடாது அது எமது முஸ்லிம்;களின் மீள்குயேற்ற விடயங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஊண்மையாக வன்னி முஸ்லிம்களை நேசிக்கும் அரசியல்வாதிகளாக இருந்தால் அவர்கள் மீது கொஞ்சம் இரக்கப்பார்வையுடன் செயற்படுங்கள். வெறுமனே தேர்தல் காலங்களில் வாக்களிப்பதற்கு மட்டும்தான வன்னி முஸ்லிம்கள் தேவை.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *