Breaking
Tue. May 7th, 2024
ஐந்து வருடங்களாக புனர்வாழ்வு அமைச்சராக இருந்தீர்கள் எனவும்   முஸ்லிம்களை குடியேற்றவில்லை என்று தன் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். ஐந்து வருடங்களில் நாலரை வருடங்கள் இந்த நாட்டிலே சமாதானம் இருக்கவில்லை. ஆறு மாதங்கள் தான் சமாதானம் இருந்தது. முகாமிலே தத்தளித்துக் கொண்டிருந்த மூன்று இலட்சம் தமிழர்களை மீள்குடியேற்றம் செய்யாமல் இருபத்தையாயிரம் முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்திருந்தால் நான் ஒரு மனிதனாக இருக்க முடியாது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கைத்தொழில், வணிக் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் வவுனியாவில் நேற்று (2) தெரிவித்தார்.
வவுனியா வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்திருந்த பாராளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்களை பாராட்டி,கௌரவிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை வவுனியா நகர கலாசார மண்டபத்தில் இடம் பெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார். மேலும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் தமதுரையில் –
யுத்தத்தின் காரணமாக தமிழ் மக்கள் இடம் பெயர்ந்து அகதிகளாக வந்தபோது, சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் உணவளித்திருந்தார்கள். அவ்வாறாக இன்பத்திலும் துன்பத்திலும் தன்னை அர்ப்பணிக்கின்ற மாவட்டமாக வவுனியா மாவட்டம் இருக்கிறது. நாங்கள் அரசியல்வாதிகளாக முரண்பட்ட அறிக்கைகளை விடுத்திருந்தாலும் இன்று ஒன்றாக இருக்கிறோம். அவரவர் சார்ந்த சமூகத்தின் உரிமைக்காக அவர்கள் பேசவில்லையென்றால் தெரிவு செய்த மக்களுக்கான நன்றிக்கடனை செலுத்த முடியாது. நான் தமிழர்களின் விரோதியல்ல சிலர் என்னை தமிழர்களின் விரோதியாக காட்டுகிறார்கள். சிலர் சிங்களவரின் விரோதியாக என்னை காட்டுகிறார்கள். ஆனால் யாருக்கும் நான் விரோதியல்ல நானும் கடந்த யுத்தத்தில் பாதிக்கப்பட்டவன்.
தமிழ் மக்களுடைய மீள்குடியேற்றம் முற்றுப்பெறவில்லை. ஆனால் அதை செய்யும் கடமை  தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் எனக்கும் மாகாணசபைக்கும் மைத்திரிக்கும,; ரணிலுக்கும் இருக்கிறது. அதேபோல் அகதிகளாக இருக்கும் ஒரு இலட்சம் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் செய்யும் பொறுப்பு எனக்கு இருப்பதைப் போல் வடமாகாண சபையில் இருக்கின்ற அத்தனை பேருக்கும் இருக்கிறது என்பதனை மனச்சாட்சியுள்ள அத்தனை பேரும் ஏற்றுக்கொள்வார்கள்.
எனவே ஒரு தீர்வு நிச்சயமாக தேவை 30 வருட யுத்தம் சாதாரண யுத்தமல்ல. இங்கே மக்கள் பிரதி நிதியாக இருக்கும் பலர் ஆயுதங்களை ஏந்தி போராடியவர்கள் உயிரை மாய்க்க துணிந்தவர்கள். எந்த தீர்வையும் தராமல் சிங்கள பெரும்பான்மை எங்களை ஏமாற்ற அவர்கள் பயன்படுத்தும் கருவி தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரித்து வைத்திருப்பதுதான்.
எனது ஐந்து உறுப்பினர்கள் மற்றும் ரவூப் ஹக்கீமின் ஏழு உறுப்பினர்களுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் 16 உறுப்பினர்கள் இவர்களை மோத விட்டால் இந்த நாட்டில் எந்த தீர்வும் வந்துவிடாது. எனவே தமிழ் தலைமைகள் சிந்திக்க வேண்டும். முஸ்லிம்கள் ஒரு போதும் தமிழ் மக்களின் எதிரிகளல்ல. நீண்டகாலம் அரசியலில் இருக்கும் நீங்கள் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் ஜனாதிபதியோ,மைத்திரியோ ரணிலோ அவர்கள் எதையும் சிறுபான்மை சமூகத்திற்கு கொண்டுவந்து திணிக்கப்போவதில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.அதனை நாங்கள் போராடியோ nடிபறவேண்டும்.
எனவே எங்களுடைய உரிமைகளுக்காக ஒன்றுபடுவோம். சிங்களவர்களுக்கு நாங்கள் எதிரியல்ல எங்களுக்கும் சம உரிமை வேண்டும் அதைப்பெற்றுக்கொள்ள உங்களோடு சேர்ந்து கைகொடுக்க நாங்கள் தயாராகவுள்ளோம்.
உங்களது அரசியல் தேவைப்பாடுகளுக்காக பிழையான கருத்துக்களை நீஙகள் சமூகங்களுக்கிடையில் திணிக்கும் வேளையினை செய்யாதீர்கள்,வடக்கில் முஸ்லிம் வெளியேற்றப்பட்டார்கள் அவர்கள் 25 வருடம் அகதிகளாக வாழ்கின்றனர் என்பதை மறந்து நீங்கள் செயற்படுவது கவலைத்தருவதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன தமதுரையின் போது கூறினார்.
DSC02147
DSC_0087
DSC_0041

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *