Breaking
Thu. May 2nd, 2024

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை யாழ் பகுதிக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

யாழ் சென்றுள்ள ஜனாதிபதி, புங்குடுதீவில் இடம்பெற்ற மாணவியின் படுகொலை தொடர்பில் விசேட நீதிமன்றத்தின் ஊடாக விசாரணைகள் இடம்பெற்று உரிய தீர்ப்பு குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

புங்குடுதீவு மாணவி வித்தியா வன்கொடுமைக்குப் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
வித்தியாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர்களை விசேட நீதிமன்றில் நிறுத்தி, குற்றவாளிகளை இனங்கண்டு அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.
இன்று முற்பகல் 10:15 மணியளவில் பழைய மாநகர சபை வளாகத்தில் ஜனாதிபதி வந்திறங்கினார். அவரை வடமாகாண ஆளுநர் பளிஹக்கார வரவேற்று ஆளுநர் அலுவலகத்திற்கு அழைத்துச்சென்றார். அங்கிருந்து ஜனாதிபதி குழுவினர் வேம்படி உயர்தரப் பாடசாலைக்கு சென்றடைந்தனர்.

அங்கு மாணவர்கள் ஆசிரியர்கள் மத்தியில் ஜனாதிபதி உரையாற்றினார். இதன்போதே அவர் இந்த உறுதியை வழங்கினார்.

இந்த விசேட கலந்துரையாடலில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன், தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *