Breaking
Thu. May 2nd, 2024

யாழ். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவின் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த  பாடசாலை மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் 10 ஆவது சந்தேக நபரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன் தினம் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் பெற்றுக்கொண்ட தடுப்புக் காவல் உத்தரவுக்கு அமைய குர்றப் புலனாய்வுப் பிரிவின் விஷேட பொலிஸ் குழு விசாரணைக்கு உட்படுத்தி வருவதாக பொலிஸ் தலைமையகத்தின் நம்பகரமான  வட்டாரங்கள் தெரிவித்தன.

நாயினதீவு பிரதேசத்தைச்   சேர்ந்த 24 வயதுடைய நபர் ஒருவரையே இவ்வாறு குற்ற புலனாய்வு பிரிவின் விஷேட விசாரணைக் குழுவினர்  கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஒன்பது பேரில் பிரதான சந்தேக நபர்களில் ஒருவராக கருதப்படும் சந்தேக நபரின் நண்பர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

விளக்கமரியலில் உள்ள சந்தேக நபர்களிடம் குர்ரப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு விசாரணைக் குழுவிற்கு தலமை தாங்கும் கடத்தல் மற்றும் மனிதப் படுகொலைகள் தொடர்பிலான சிறப்பு விசாரணையாளர் பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த டீ சில்வா தலமையிலான பொலிஸ் குழுவினர் முன்னெடுத்த விசாரணைகளின் பலனாகவே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கடந்த மே மாதம் 13 ஆம் திகதி பாடசாலைக்கு சென்ற மாணவி கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்டு இருந்தார்.

அந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் ஏற்கனவே ஒன்பது நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  கடந்த முதலாம் திகதி மன்றுக்கு மேலதிக அரிக்கை9யையை சம்ர்பித்திருந்த புலனாய்வுப் பிரிவினர் மேலும் சிலர் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படலாம் என அப்போதைய விசாரணைத் தகவல்களை வைத்து தெரிவித்திருந்தனர்.

இந் நிலையிலேயே நேற்று முன் தினம் 10 ஆவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *