Breaking
Tue. May 7th, 2024

பம்­ப­ல­ப்பிட்டி -கொத்­த­லா­வல எவ­னி­யூவில் இருந்து கடத்தி படு­கொலை செய்­யப்­பட்ட 29 வய­து­டைய இரு பிள்­ளை­களின் தந்­தை­யான சகீப் சுலை­மானை கடத்தல், படு­கொலை திட்­டத்தை நெறிப்­ப­டுத்­தி­ய­தாகக் கூறப்­படும் பிர­தான சந்­தேகநபர் ஒரு­வரை குற்றத் தடுப்புப் பிரி­வினர் கைது செய்­துள்­ளனர்.

நீதி­மன்ற அனு­ம­தி­யுடன் ஏற்­க­னவே கைது செய்­யப்­பட்­டி­ருந்த 8 சந்­தேக நபர்­க­ளுக்கு சொந்­த­மான 13 தொலை­பேசி இலக்­கங்­களை மையப்­ப­டுத்தி நடத்­தப்­பட்ட விசா­ர­ணை­யி­லேயே பிர­தான சந்­தேக நப­ராக கரு­தப்­படும் கொலை செய்­யப்­பட்ட வர்த்­த­கரின் நம்­பிக்­கைக்­கு­ரிய சேவ­க­ரான சந்­தேக நபரின் சகோ­தர முறை­யி­லான ஒரு­வரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

கைதான சந்­தேக நபரை 48 மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்து விசா­ரணை செய்த பின்னர் கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்­னி­லையில் பொலிஸார் ஆஜர் படுத்­தி­யுள்­ள­துடன் எதிர்­வரும் 15 ஆம் திகதி வரை அவரை விளக்­க­ம­றி­யலில் வைக்க இதன் போது நீதிவான் உத்­த­ர­விட்­டுள்ளார்.

கைதான சந்­தேக நப­ருக்கு எதி­ராக சதித் திட்டம் தீட்­டி­யமை, தெரிந்­து­கொண்டே கொலை, கடத்தல் தக­வல்­களை மறைத்­தமை, சாட்­சி­களை அழிக்க முயற்­சித்­தமை உள்­ளிட்ட குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன.

9 ஆவது சந்­தேக நப­ராக இறு­தி­யாக கைது செய்­யப்­பட்ட சந்­தேக நப­ருக்கு 7 ஆவது சந்­தேக நபர், வர்த்­தகர் கொலையின் பின்னர் வர்த்­த­கரின் தொலை­பே­சியில் இருந்தே அழைப்­பொன்றை ஏற்­ப­டுத்­தி­யுள்ளார். அதன் போது வர்த்­தகர் இறந்­து­விட்­ட­தா­கவும் அது தொடர்பில் முன்­னெ­டுக்க வேண்­டிய மேல­திக நட­வ­டிக்கை குறித்தும் ஆலோ­சனைக் கோரி­யுள்ளார். இந் நிலையில் தற்­போது இறு­தி­யாக கைதான சந்­தேக நபரே மாவ­னல்லை – உக்­கு­லா­கம பகு­தியில் சட­லத்தை கைவிட ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார். அவரின் ஆலோ­ச­னைக்கு அமை­வா­கவே கடத்தல், கொலை உள்­ளிட்­டவை நடந்­துள்­ள­தாக சந்­தே­கிக்கும் பொலிஸார் குறித்த குற்­றங்­களை புரிய நெறிப்­ப­டுத்­தலை முன்­னெ­டுத்தார் என அவர் மீது குற்றம் சாட்­டு­கின்­றனர்.

இத­னை­விட 7 ஆவது சந்­தேக நப­ருடன் கடத்தல் தின­மான கடந்த ஆகஸ்ட் 21 ஆம் திகதி முதல் சந்­தேக நபர் தொலை­பேசி வழியே தொடர்பில் இருந்­துள்­ள­மையும் அவ்­வப்­போது ஆலோ­ச­னை­களை வழங்­கி­யுள்­ள­மையும் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவின் ன் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் நிஸாந்த டி சொய்­ஸாவின் மேற்­பார்­வையில் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் சந்­தி­ர­தி­லக மற்றும் அதன் பொறுப்­ப­தி­காரி நெவில் டி சில்வா ஆகி­யோரின் கீழான சிறப்புக் குழு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *