Breaking
Sun. May 5th, 2024

கடலை நிரப்பி 233 ஹெக்டயரில் உருவாக்கப்படும் துறைமுக நகரத்திற்கான நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சீன ஜனாதிபதி i ஜின்பிங் ஆகியோரினால் நேற்று உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 1337 மில்லியன் அமெரிக்க டொலர் நேரடி வெளிநாட்டு முதலீட்டுடன் ஆரம்பிக்கப்படும் இந்த பிரமாண்டமான அபிவிருத்தி திட்டம் 8 வருடங்களில் முழுமையடைய இருக்கிறது.

இரண்டு கட்டங்களாக மேற் கொள்ளப்படும் கொழும்பு துறைமுக நகர திட்டத்தின் மூலம் பெருமளவு நேரடியான மற்றும் மறைமுகமான தொழில்வாய்ப்புகள் உருவாக்கப்பட வுள்ளன. சொகுசு ஹோட்டல்கள். அடுக்குமாடிக் குடியிருப்புகள்,

வணிக வளாகங்கள், நவீன பாதைகள், பொழுது போக்கு அம்சங்கள் உட்பட பல வசதிகளுடன் கூடிய நவீன நகரமாக இது உருவாக்கப்படவுள்ளது. இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன ஜனாதிபதி. துறைமுக நகர நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பங்குபற்றினார்.

துறைமுக நகர நிர்மாணப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வு, கொழும்பு துறைமுக வளாகத் தில் நேற்றுக் கலை கோலாகலமாக நடை பெற்றது. காலை 9.00 மணியளவில் இரு நாட்டு ஜனாதிபதிகளும் கொழும்பு துறை முகத்தில் அமைந்துள்ள கொழும்பு சர்வதேச கொள்கலன் இறங்குதள தொகுதிக்கு வருகை தந்தனர். இந்த விழாவுக்கு வருகை தந்த சீன ஜனாதிப தியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, துறைமுக நெடுஞ்சாலைகள் திட்ட அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் வரவேற்றனர்.

இங்கு அமைக்கப்பட் டிருந்த துறைமுக நகரின் மாதிரியை இரு நாட்டுத் தலைவர்களும் பார்வை யிட்டதோடு கொழும்பு சர்வதேச துறைமுக கொள்கலன் இறங்குதளத் தையும் பார்வையிட்டனர். கொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பு தொடர்பான விபரங்களை சீன கொமியூனிகேசன் கொன்ஸ்ட்ரக்ஷன் கம்பனி (Chinis Communication Construction Company) உயரதிகாரிகளும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன. துறைமுக அதிகார சபை தலைவர் பிரியத் பந்துவிக்ரம ஆகியோரும் இரு நாட்டு தலைவர்களும் விளக்கினர்.

இதனைத் தொடர்ந்து இரு நாட்டுத் தலைவர்களும் துறைமுக நகர நிர்மாணிப்புக்கான நினைவுப் படிகத்தை திறந்து வைத்தனர். தேசிய பாரம்பரிய நடன கலைஞர்களின் மேள தாளங் களுடனான வரவேற்புடன் அவர்கள் நினைவுப் படிகத்திற்கு அருகில் அழைத்துவரப்பட்டனர். பின்னர் விழா மேடைக்கு அழைத்து வரப்பட்ட இரு நாட்டு ஜனாதிபதிகளும் நாடாவை வெட்டி நிர்மாணப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

அதனோடு கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மணல் அகழும் கப்பலில் இருந்து மணலை பீய்ச்சி சம்பிரதாய பூர்வமாக நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த நிகழ்வை கண்டுகளிப்பதற்காக பெருமளவான பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்கள் இருந்த இடத்துக்குச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மக்களுக்கு கையசைத்து மகிழ்ச்சி வெளியிட்டதோடு பொதுமக்கள் கோசமெழுப்பு தமது பாராட்டை தெரிவித்தனர்.

கொழும்பு தெற்கு துறைமுக அபிவிருத் தியுடன் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டம் அமைச்சரவையின் அனுமதி யுடன் ஆரம்பிக்கப்படுகிறது. இது தொடர்பில் துறைமுக அதிகார சபைக் கும் சைன கொமியுனிகேசன் கன்ஸ்ட் ரக்ஷன் கம்பனிக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. கடலை நிரப்புவதினூடாக உருவாகும் 233 ஹெக்டயரில் 177 ஹெக்டயர் அபிவிருத்தி செய்யப்பட உள்ளது. 63 ஹெக்டயர் நிலப்பரப்பு பொது வசதிகள், வீதிகள், நீர்ப்பாதை. பூங்கா என்பவற்றுக்காக ஒதுக்கப்படுகிறது.

துறைமுக அதிகார சபையினூடாக முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டம் முதலீட்டுச் சபை வரிச் சலுகையுடன் செயற்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் காலி முகத் திடலுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாது எனவும் அறிவிக்கப்படுகிறது.

முதலாம் கட்டத்தின் கீழ் கடலில் நிலப்பகுதியை உருவாக்குவது 75 ஹெக்டயரில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத் துவது என்பன முன்னெடுக்கப் படும். 2 ஆம் கட்டத்தின் கீழ் 95 ஹெக்டயரில் உட்கட்டமைப்பு வசதிகள் முன்னெடுக் கப்படும். முதலாம் கட்டம் 3 வருட காலத்தினுள் நிறைவு செய்யப்பட இருப்பதோடு முழுத் திட்டத்தையும் 8 வருடத்தில் நிறைவுசெய்ய உத்தேசிக் கப்பட்டுள்ளது.

கடலை நிரப்புவதற்கு 35 மில்லியன் கன மீட்டர் கருங்கல் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.233 ஹெக்டயரில் உருவாகும் துறைமுக நகரில் 108 ஹெக்டயர் முதலீட்டாளருக்கும் 125 ஹெக்டயர் இலங்கை அரசாங்கத்துக்கும் வழங்கப்பட இருக்கிறது. முதலீட்டா ளருக்கு வழங்கும் 108 ஹெக்டயரில் 20 ஹெக்டயர் சுதந்திரமாக அனுபவிக்க வழங்கப்பட இருப்பதோடு 88 ஹெக்டயர் நிலம் 99 வருட குத்தகைக்கு வழங்க தீர்மானிக்கப் பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு சொந்தமான 125 ஹெக்டயரில் 63 ஹெக்டயர் பொது வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தப்பட உள்ளது. ஒப்பந்தப்படி அரசாங்கத்துக்கு 213 ஹெக்டயரும் முதலீட்டாளருக்கு 20 ஹெக்டயர் காணிகளும் சொந்த மாகின்றன.

(TK)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *