Breaking
Fri. Dec 19th, 2025

களுத்துறை பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 15 வயதான மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் 6 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 
தொடங்கொட பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்தியநபர்கள் அதனை ஒளிப்பதிவு செய்து விற்பனை செய்துள்ளனர்.
 
மாணவி தனது காதலுடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை காட்டி மாணவியை அச்சுறுத்தியுள்ள இளைஞர்கள் சிலர், அவரை தமது நண்பர்களுடன் இணைந்து விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று இந்த குற்றச் செயலை புரிந்துள்ளதுடன் அதனை ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
 
மாணவியின் தாய் வெளிநாட்டில் தொழில் புரிந்து வருவதுடன், தந்தை பாடசாலை வான் சாரதியாக பணியாற்றி வருகிறார். மாணவி, தனது பாட்டியுடன் வசித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்தியவர்கள் 18 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டவர்கள்.
 
மாணவியையும் இளைஞர்களையும் படம்பிடித்த இளைஞர், விடுதியின் முகாமையாளர் மற்றும் எடுக்கப்பட்ட விடியோவை வைத்திருந்த இளைஞர் ஆகியோர் நேற்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ( பொற்றோர்கள் கட்டாயம் பார்கவும். உங்கள் நண்பர்களுக்கும் share பண்ணுங்கள் . ( பெற்றோர்களே உங்கள் பிள்ளைகள் மீது மிகவும் அவதானமாக இருங்கள். பணம் பணம் என்று அலையாமல் இதைப் பார்த்தாவது விழித்திடுங்கள்)

Related Post