Breaking
Thu. May 16th, 2024

– அஸ்ரப் ஏ சமத் –

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் ஊடகவியலாளர் மாநாடு ஐ.எஸ் பற்றிய இலங்கை முஸ்லீம் அமைப்புக்களின் கூட்டுப் பிரகடனப்படுத்தப்பட்டது.

மேற்படி விடயமாக நேற்று மாளிகாவத்தையில் உள்ள அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைமையகத்தில் அதன் தலைவர் அஸ் ஷேக் றிஸ்வி முப்தி தலைமையில் ஊடக மாநாடு நடைபெற்றது.

இங்கு அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் – 1924ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த உலமா சபை இன்றும் ஒரு கட்டுக்கோப்பின் கீழ் இலங்கை வாழ் முஸ்லீம்களது மத கலை கலாச்சார வாழ்வாதார விடயங்களில் ஒரு கட்டுப்பாட்டின் கீழ் ;இயங்கி வருகின்றது.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட தீவிரவாதத்திற்கு எதிரான இம்மாட்டில் கலந்து கொண்ட முஸ்லீம் அமைப்புக்களான முஸ்லீம் கவுன்சில், ஸ்ரீலங்கா ஜம்மியத்துல் உலமா, ஸ்ரீலங்கா ஜம்மியத்துல் இஸ்லாமி, ஜமாத்துல் சலாமா, ஜம்மியத்துல்சபாப், அல் முஸ்லீமாத், சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பு, உலக முஸ்லீம் இளைஞர் அமைப்பு, வை.எம்.எம்.ஏ, தப்லீக் ஜமாஆத், அகில இலங்கை தொளஹீத், கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஆகிய இணைந்து இந்த கண்ட அறிக்கையை வெளியிட்டனர்.

இங்கு உலமா சபையின் செயலாளர் அஸ் ஷேக் எம்.எம்.ஏ முபாரக், மௌலவி, ஊடக பேச்சாளர் எம். எம்.ஏ.தஹ்லான், ஆகியோறுடன் ஊடகச் செயலளர் அஷ்ஷேக் பாசில் பாருக் ஆகியோர் ஊடகவியலாளர் மத்தியில் தமது கருத்துக்களையும் ஊடகவியலாளர்களது கேள்விகளுக்கும் பதிலளித்தார்கள்.

ISIS என்ற ஒரு கடுமையான தீவிரவாத இஸ்லாமிய அடிப்படை விழுமியங்களுக்கு எதிரான ஒரு அமைப்பாகும், இஸ்லாத்தின் அனைத்து கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணாக செயற்படும் அமைப்பாக இது காணப்படுகின்றது. என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ISIS என்ற அமைப்பில் இலங்கையைச் சோந்த ஒருவர் சிறியாவில் தொடர்பு பற்றுள்ளதாகவும் அவர் இறந்துள்ளதாகவும் ஊடகங்கள் ஊடகவே நாம் அறிந்தோம். இந்த நாட்டில் வாழும் முஸ்லீம்கள் மிகவும் ஏனைய சமுகங்களோடு அந்நியோன்னியமாகவும் சமாதானிகளாகவும் ஏனைய சமுகங்களுக்கு சாமாதானப் பாலமாக இருந்து வருகின்றனர். இந்த நாட்டின் அரசாங்கம், பாதுகாப்பு பிரிவினர், பொலிஸ் இவற்றை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் அதற்காக நமது அமைப்பினர் பூரண ஆதரவினையும் ஒத்துழைப்பையும் வழங்குவோம். அத்துடன் இந்த தீவிரவாத இயக்கத்தை உலகில் உள்ள சகல முஸ்லீம் நாடுகள் முஸ்லீம் இஸ்லாமிய அமைப்புக்கள் அந்த இயக்கத்தை வன்மையாக கண்டித்துள்ளன. இந்த இயக்கம் இஸ்லாமிய மதத்திற்கு எதிரான வன்முறைகளில் இயங்கி வருகின்றது.

இவ்வாறான இயங்கங்களில் எமது நாட்டு முஸ்லீம்கள் ஒரு போதும் ஆதரவு வழங்க மாட்டார்கள். இவ் இயக்கம் பற்றி எமது அமைப்புக்கள் ஜூம்ஆ மற்றும் எமது உலமாக்கள் ஊடகாக முஸ்லீம்களுக்கு தெளிவுபடுத்தப்படும். அதே போன்று மத்திய கிழக்கு நாடுகள், மற்றும் தெ;hழில் உயர்கல்வி இஸ்லாமிய கல்வி பயில வெளிநாடுகள் செல்லும் எவரும் இதனை ஆதரிக்கமாட்டர்கள். ஆனால் இதனை இலங்கையில் உள்ள சில ஊடகங்கள் திரிவுபடுத்தி ஏதோ இலங்கை முஸ்லீம்களும் தீவிரவாத அமைப்பில் உள்ளார்கள் என சோடித்துக் காட்டுகின்றனர். நாம் இதனை வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த நாட்டின் வரலாற்றில் முதன் முறையாகவே அன்மையில் சிரியாவில் கொலைசெய்யபடப்ட செய்தி எமக்கு கிடைத்துள்ளது. அதற்காக முழு முஸ்லீம்களையும் நாம் பயங்கரவாதிகள் என சித்தரிக்க் கூடாது. எனவும் ஊடக மாநட்டில் உலமா சபையினர் தெளிவு படுத்தினர்.

மேற்குலக ஊடகங்கள் ஜிகாத் என்ற சொல்லுக்கு கொலை, செய்தல், அநியாயமான முறையில் போர் தொடுத்தல் போன்ற பிழையான கருத்துக்களை கொடுப்பதற்கு முயற்சிக்கின்றனர். எந்தவொரு அமைப்பும் ஜிஹாத்’ என்ற சொல்லை அப்பாவி மக்களை போதனைகளுக்கும் முற்றிலும் முரணானதாகவே காணப்படும். ஆகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவினால் வெளியிடப்பட்ட சமுகஙக்களுக்கிடையிலான கலந்துரையாடல் எனும் வெளியீடுகளில் ஜிகாத் பற்றிய மிகச் சரியான தெளிவு வழங்கப்பட்டுள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *