Breaking
Wed. May 8th, 2024

1437-01-22

2015-11-05

தென்னிந்தியாவைச் சேர்ந்த பீ. ஜைனுலாப்தீன் அவர்கள் ஒரு நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொள்ள இருப்பதாக ஊடகங்களினூடாக அறிய முடிகிறது.

கடந்த கால அவரது விஜயத்தின் பொழுது ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகள் மற்றும்  சமூக ஒற்றுமையையும், சக வாழ்வையும் சீர்குலைக்கும் சம்பவங்கள் ஏதும் ஏற்படாமலிருப்பதை கவனத்திற் கொண்டு இலங்கையின் பல முன்னணி இஸ்லாமிய நிறுவனங்களும், அமைப்புக்களும், அறபுக் கல்லூரிகளும் அவரது விஜயம் ஆரோக்கியமற்றது என எழுத்து மூலமும், தொலைபேசி மற்றும் நேரடியாகவும் ஜம்இய்யாவுக்கு அறிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் மேற்படி காரணங்களை கருத்திற் கொண்டு அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறது என்பதையும் நாட்டு மக்களுக்கு அறியத் தருகிறோம்.

அத்துடன் அவர் கூறும் சில கருத்துக்கள் மற்றும் கொள்கைகள் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு மாற்றமாக இருப்பதாலும் இது விடயத்தில் சகலரும் மிக அவதானமாகவும், எச்சரிக்கையாகவும் நடந்துகொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கிறது.

இது தொடர்பாக குறித்த ஏற்பாட்டாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சகோ. ஆதம் அலி
பிரதம நிறைவேற்று அதிகாரி

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *