Breaking
Mon. May 6th, 2024

மன்னார் மற்றும் யாழ் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தொடர்பில் முக்கிய கலந்துரையாடலொன்று அடுத்தவாரம் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இடம் பெறவுள்ளது.

வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவரும்,கைதெ்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் கடற்றொழில்,நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர விடத்தில் விடுத்த வேண்டுகோளின் பேரில் இன்று கடற்றொழில் அமைச்சில் மன்னார் தாழ்வுபாடு மற்றும் தலைமன்னார் பியர் மீனவ சங்கப் பிரதி நிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தின் போது அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்தார்.

குறிப்பாக மன்னார் பிரதேச மீனவர்கள் தற்போது கடற்றொழிலில் ஈடுபடுவதில் காணப்படும் தடைகள் தொடர்பில் இதன் போது மீனவர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது.

இதேவேளை, இந்திய மீனவர்களின் ஊடுவல் காரணமாக தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,இவர்களது இந்த ஊடுருவலை தடுக்க கடும் நடவடிக்கையெடுக்கப் பட வேண்டும் என்ற விடயத்தினையும் இதன் போது மீனவர்கள் சுட்டிக்காட்டினர்.

இவற்றை செவியுற்ற அமைச்சர் மஹிந்த அமரவீர அடுத்தவாரம் இடம் பெறும் இக்கூட்டத்தில் பாதுகாப்பு தரப்பினரையும் கலந்து கொள்ள அழைப்புவிடுக்குமாறும்,இந்த கூட்டத்தில் வருகைத்தந்துள்ள பிரதி நிதிகளில் இருவர் கலந்து கொள்ளுமாறும் அமைச்சர் கூறினார்.

இதன்போது, அமைச்சர் றிசாத் பதியுதீனின் இணைப்பு செயலாளர் இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *