Breaking
Sun. May 5th, 2024

 சிங்­கள பௌத்­தர்­களின் தேசம் இலங்கை என்­பதை ஏற்­றுக்­கொள்­ப­வர்­க­ளுக்கே ஊவா மாகாண சபைத்­தேர்­தலில் மக்கள் வாக்­க­ளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பொது­ப­ல­ சே­னா கோரிக்கை விடுத்துள்ளது.

அவ்­வா­றான வேட்­பாளர் தமி­ழ­ராக, சிங்­க­ள­வ­ராக, முஸ்­லி­மாக இருந்­தாலும் பிரச்­சி­னை­யில்­லை­யென
சட்ட விரோத வர்த்­த­கங்­களில் ஈடு­ப­டு­வோ­ருக்கு மக்கள் வாக்­க­ளிக்க கூடாது

உலகில் எங்கும் இல்­லாத தேர்தல் கலா­சாரம் இங்கு காணப்­ப­டு­கின்­றது. ஒரு­வ­ருக்­கொ­ருவர் சேறு­பூ­சிக்­கொள்­வதும் வன்­மு­றை­களும் கொலை­களும் என கீழ்த்­த­ர­மான தேர்தல் கலா­சா­ரமே காணப்­ப­டு­கின்­றது.

எந்­த­வொரு தொழி­லுக்கு இணைய வேண்­டு­மானால் அதற்கு கல்­வித்­த­கைமை உட்­பட வேறு தகு­திகள், குடும்ப பின்­னணி தேவை. ஆனால், இங்கு அர­சியல் செய்­வ­தற்கு எந்­த­வி­த­மான கல்வி அறிவோஇ தகு­தியோ, குடும்ப பின்­ன­ணியோ தேவை இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கசிப்பு வியா­பாரம் அல்­லது போதைப்­பொருள் வியா­பாரம் என எந்­த­வி­த­மான சட்­ட­வி­ரோத வர்த்­தகம் செய்­ப­வர்­க­ளாக இருந்­தாலும் அவர்­களால் இங்கு அர­சியல் செய்ய முடியும்.

தேர்­தலில் போட்­டி­யிட முடியும். இந்­நிலை மாற வேண்டும். அதனை மக்­க­ளா­லேயே மாற்ற முடியும். எனவே, ஊவா மாகாண சபைத்­தேர்­தலில் தகு­தி­யா­ன­வர்­க­ளுக்கு வாக்­க­ளிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நாடு சிங்­கள பௌத்­தர்­க­ளுக்கு சொந்­த­மான நாடு என்றும் எமது கலா­சாரம் வர­லாறு தெரிந்­த­வர்கள் எவ­ராக இருந்­தாலும் அவ்­வா­றான வேட்பாளர்கள் தமிழராக, சிங்களவர்களாக, முஸ்லிம் ஆக இருக்கலாம்.

இந்த நிலைப்பாடு கொண்ட வேட்பாளர்களை இத்தேர்தலில் வெற்றி பெற செய்ய வேண்டும் என பொதுபலசேனா கோரிக்கை விடுத்துள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *