Breaking
Mon. May 13th, 2024

நைஜீரியாவில் ஆயுதமேந்தி போராடிவரும் பொக்கோஹராம் வாதிகளினால் 200 பாடசாலை மாணவிகள் கடத்தப்பட்டதன் ஒருவருட நினைவு நிகழ்வு இன்று (14)  பிரிட்டன்- அமெரிக்கா உட்பட உலகின் பல  நாடுகளில் அனுஷ்டிக்கப்படுகிறது.

நைஜீரிய தலைநகர்  அபுஜாவில் நடைபெற்ற நினைவு ஊர்வலத்தில் கடத்தப்பட்ட சிறுமிகளை நினைவுகூறும் வகையில் 210 சிறுமிகள் கலந்துகொண்டனர்.கடந்த வருடம் தொடக்கம் இதுவரை சுமார் சுமார் பெண்களும் சிறுமிகள் பொக்கோஹராம் அமைப்பினால் கடத்தப்பட்டுள்ளனர் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.இவர்கள் சமைப்பதற்காகவும் பாலியல் அடிமைகளாகவும் போராளிகளாகவும் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி வடகிழக்கு நைஜீரியாவின் சிப்போக் பிரதேசத்தில் இச்சிறுமிகள் கடத்திச் செல்லப்பட்டனர். அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தேடும் நடவடிக்கையில ஈடுபட்ட போதிலும் இதுவரையில் அவர்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்படவில்லை.

கடத்தப்பட்ட சிறுமிகள் தொழுகையில் ஈடுபடும் படங்கள் #BringBackOurGirls hashtag, என்ற டிவிட்டர் கணக்கினூடாக வெளியிடப்பட்டிருந்தது. இப்படங்கள் பிரபல நபர்களான நோபல் பரிசு வென்ற மலாலா யூசாப்சை மற்றும் அமெரிக்க முதற் பெண்மணி மிட்செல் ஒபாமா ஆகியோரின் டிவிட்டர் கணக்குகளில் இணைத்து வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *