Breaking
Mon. Apr 29th, 2024

வடக்கிலும்,கிழக்கிலும் 20000 புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் அதற்கு அமெரிக்காவின் உதவிகளையும் எதிர்பார்ப்பதாக கூறினார்.

அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கும்,இலங்கைக்கான அமெரிக்க பதில் துதுவர் அன்று சீமானுக்கும் இடையில் இன்று ஏற்றுமதி அபிவிருத்தி சபையில் இடம் பெற்ற சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு வேண்டுகோள்விடுத்தார்

மேலும் இந்த சந்திப்பின் போது அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவிக்கையில் –
அதே வேளை இலங்கையின் நுகர்வு பொருட்களை அமெரிக்க கொள்வனவு செய்துவருகின்றது.இலங்கையின் அமெர்க்காவுக்கான ஏற்றுமதி 2 பில்லியன்களாகும்.அந்த வகையில் தைத்த ஆடைகளே அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

இன்னும் இலங்கையில் அமெரிக்காவின் முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை செய்வதற்கான சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது என நம்புகின்றேன்.இலங்கையின் எழுத்தறிவு வீதம் ஆசியாவில் முன்னணியில் இருக்கின்றது.தொழிலாளர்களின் உழைக்கும் திறமை மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிய ஆறு தையல் தொழிற் பேட்டைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளேன்.அதில் மன்னார்,முல்லைத்தீவு .வவுனியா,திருகோணமலை,மட்டக்களப்பு
அம்பாறை ஆகிய மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

யுத்தம் இந்த நாட்டில் பெரும் அழிவினை ஏற்படுத்தியுள்ளது.இதனால் பெரும் எண்ணிக்கையிலான விதவைகள் வடக்கிலும்,கிழக்கும் இன்று காணப்படுகின்றனர்.இவர்களது வாழ்வாதார மேம்பாடுகளுக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இந்த தொழிற்போட்டை ஆரம்பிக்கவும் திட்டமிட்டுள்ளேன் என்றும் கூறினார்.

அது தொடர்பில் அமெரிக்க பதில் துதுவர் கருத்துரைக்கையில்-
இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள நட்புறவு மிகவும் முக்கியமானது.எல்லா சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு உதவி செய்யும் எண்ணத்தை அமெரிக்கா கொண்டுள்ளது.அமைச்சரின் அழைப்பின் பேரில் அமெரிக்க முதலீட்டாளர்கள் ,மற்றுமு வியாபார கமூகத்தை இலங்கைக்கு அழைத்துவர நாம் நடவடிக்கையெடுக்கவுள்ளோம்.அதே போல் இலங்கையின் புதிய தொழில் வாய்ப்புக்களுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு எமது ஒத்துழைப்பினை வழங்குவதாகவும் அமெரிக்க பதில் துதுவர் கூறினார்.

அதே வேளை இரு தரப்பு வர்த்தக உடன்படிக்கை தொடரட்பிலும் இர தரப்பு சந்திப்புக்களை எதிர்காலத்தில் எற்படுத்தவும் இதன் போது இனக்கம் காணப்பட்டது.
இந்த சந்திப்பின் போது ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் பந்துல எகொடகே,உள்ளிட்ட அதிகாரிகளும் இதன் போது கலந்துகொண்டனர்.

ri3 ri2.jpg2_2

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *