Breaking
Mon. May 20th, 2024

அறுவைக்காட்டு பிரச்சினை தொடர்பில் பிரதமருடன் பாராளுமன்றில் பேச்சு

அறுவைக்காட்டு பிரச்சினை தொடர்பில் பிரதமருடன் பாராளுமன்றில் பேச்சு : இரு வார காலத்திற்குள் பாதிப்புக்களை சமர்ப்பிக்குமாறு மக்களிடம் பிரதமர் வேண்டுகோள் புத்தளம், அறுவைக்காட்டில் குப்பைகளை…

Read More

கிண்ணியா நடுவூற்று பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செமட செவன வீடமைப்பு திட்டம் மக்களிடம் கையளிப்பு!!

வீடமைப்பு நிர்மாணத் துறை அமைச்சின் கீழ் உள்ள" செமட செவன" வீடமைப்புத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான  வீட்டுத் திட்டம் வழங்கும் நிகழ்வு…

Read More

நாகதாழ்வு முள்ளிப்பள்ளம் கிராமத்தின் அபிவிருத்திக்கு மக்கள் காங்கிரசினால் நிதி ஒதுக்கீடு!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் அவர்கள் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட கிராமமான முள்ளிப்பள்ள கிராமத்திற்கு…

Read More

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய கிளை வாதுவை , மோதரமுல்லை திறந்துவைக்கப்பட்டது.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கு அமைவாக வாதுவை, மோதரமுல்லை பிரதேசத்தில் லங்கா சதொச…

Read More

நியூஸிலாந்து பிரதமரின் துணிகரமான செயற்பாடுகளுக்கு அமைச்சர் ரிஷாத் பாராட்டு !  உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில் முக்கிய விடயங்கள் ஆராய்வு!!!

அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கீழான திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சின் வேலைத்திட்டங்களுக்கும் செயற்பாடுகளுக்கும் நியூஸிலாந்து பல்வேறு உதவிகளை வழங்குமென உறுதியளித்த உயர்ஸ்தானியர்…

Read More

புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசியப்பொருட்களுக்கு விலைகுறைப்பு சதொச நிறுவனம் அறிவிப்பு.

தமிழ்- சிங்கள புத்தாண்டு தினத்தை  முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் அத்தியாவசியப்பொருட்கள்  பலவற்றின் விலைகளை குறைத்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் தாரிக் இன்று (04) அறிவித்தார்…

Read More

வெள்ளவத்தையில் அடாத்தாக காணிபிடித்துள்ள பெளத்த மதகுரு வில்பத்தை முஸ்லிம்கள் அழிப்பதாக நீலிக்கண்ணீர் வடிக்கின்றார் :  பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாத் குற்றச்சாட்டு 

கொழும்பு,  வெள்ளவத்தையில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியொன்றை அடாத்தாக பிடித்துக்கொ சண்டித்தனம் காட்டிவரும் பெளத்த மத குரு ஒருவரே வில்பத்து காட்டை வடக்கு முஸ்லிம்கள்  அழிப்பதாக தினமும்…

Read More

அமைச்சர் றிஷாட் ஊடகவியலாளர்கள் ஊடக தர்மத்தைப் பேணிச் செயற்படுவது இன்றியமையததாகும்!!!

இந்த நாட்டின் ஆட்சி மாற்றம் நடைபெறுவதற்கு ஊடகவியலாளர்களின் பங்குமிகப்பிரதானமானதாகும்.அதேபோல் இந்த ஆட்சியை தொலைக்க வேண்டும் என்றும் ஊடகவியலாளர்கள்செயற்படுகின்றார்கள் ஊடகவியலாளர்கள் ஊடக தர்மத்தைப் பேணிச் செயற்படுவது இன்றியமையததாகும்என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்,அமைச்சருமான றிஷாட் பதியுத்தீன் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேனத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்டஊடகவியலாளர்கள் மற்றும் சமூகசேவையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு சம்மேளனத்தின் தலைவர்கலாபூசணம் மீரா எஸ்.இஸ்ஸதீன் தலைமையில் நேற்று முன்தினம் (31.03.2019) மாலை கல்முனை ஆஷாத்பிளாசா மண்டபத்தில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி,பிரதியமைச்சர் பாலிததேவபெரும,பாராளுமன்றஉறுப்பினர்களான சிறியானி விஜயவிக்ரம,ஏ.எல்.எம்.நஸீர்,கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில்,முன்னாள்கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல்,கே.எம்.அப்துல் றசாக் உட்படஅதிகாரிகள்,உத்தியோகத்தர்கள் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள்,நிறுவனத்தலைவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர். அவர் மேலும் உரையாற்றுகையில், இந்த சின்ன நாட்டில் ஆட்சி மாற்றங்கள்  நடைபெறுகின்றபோது பொருளாதார அபிவிருத்தி உட்பட பலஇன்னல்கள் நடைபெற வாய்புள்ளன.அதனால் எதிர்காலம் சிறப்பாக அமையுமா என்ற கேள்வியும் என்முன்னால் உள்ளது. ஊடகவியலாளர்களிடத்தில் தர்மம் இருந்தாலும் ஊடகத்தில் தர்மம் இருக்க வேண்டும் இரண்டும்சமாந்திரமாக இருக்கும் போதுதான் இந்த நாட்டில் சமாதானம்,சகவாழ்வு,சமத்துவம்,பொருளாதாரம் சரியாகஅமையப்பெறும்.சில ஊடகவியலாளர்கள் தங்களது மனச்சாட்சிப்படி  செய்திகளை எழுதுவதற்கும்வாசிப்பதற்கும்,பேசுவதற்கும் முடியாமல்  தவித்துக் கொண்டிருப்பதையும் நாங்கள் காண்கின்றோம். இந்த நாட்டில் 30,40 வருடங்கள் யுத்தம் நடைபெற்றுள்ளன இன்றும் இதன் வடுகள் மாறவில்லை இந்தயுத்தத்தினால் தமிழ் மக்கள் மாத்திரமல்ல முஸ்லிம் ,சிங்கள மக்களும் பாதிப்படைந்துள்ளனர்.யுத்தத்திற்கானகாரணம் என்னவென்று தேடிப்பார்க்கின்றபோது அங்கே சில அரசியல் தலைமைத்துவங்கள் விட்டதவறுகளால்தான் அல்லது சில அரசியல் தலைமைத்துவங்கள் கண்டு கொள்ளாத காரணங்களால்தான் பாரியயுத்தம் இந்த நாட்டில் நடைபெற்றுள்ளது.இதன் பாதிப்பினால் இன்றும் இந்த நாடு மிக மோசமான நிலையில்உள்ளது. அதுமட்டுமல்ல பொருளாதார ரீதியாகவும் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது.அந்த வகையில்இன்னுமொரு சமூதாயத்தை அண்மைக்காலமாக சீண்டிப்பார்க்கும் அராஜக நிலையைத்தோற்றிவித்துள்ளனர்.பல வகையிலும் சீண்டுகின்றனர் நாங்கள் இன்னும் பொறுமையாகவுள்ளோம். இன்று நாட்டில் குறிப்பிட்ட சிலர் இனவாதத்தை தூக்கிப் பிடிக்கின்றனர். வில்பத்து என்ற இடத்தில் 1990ம்ஆண்டுக்கு முன் எமது முஸ்லிம் மக்கள் வாழ்ந்தனர். அவர்களது இடத்தில் மீள்குடியேற்றம் இடம்பெறும்போதுதான் காடுகளை அழிக்கின்றோம் என்று எனக்கெதிரான பொய்ப்பிரச்சாரங்களை சொல்லிவருகின்றனர். கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் எனக்கெதிராகப் போராட்டம் நடாத்தினார்கள். எதிர்காலத்தில்பல்கலைக்கழகத்தில் பட்டதாரிகளாக உயர் பதவி வகிப்பவராக வரவுள்ள இச்சந்ததியினர் மத்தியில் நஞ்சைஊட்டுகின்ற அநாகரீகமான கலாசாரம் இந்த நாட்டில் யுத்தத்திற்குப் பின்னர் திணிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாங்கள் முகங்கொடுக்க அச்சப்பட வேண்டிய தேவை கிடையாது. ஒரு பொய்யை வைத்துக்கொண்டுநமக்கெதிராகக் கட்டவிழ்த்து நாங்கள் அமைதியாக இருக்க வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்பார்களாகஇருந்தால் அதனை நாங்கள் செய்வோமாக இருந்தால் இறைவனிடத்தில் பதில் சொல்ல வேண்டும். இவ்வாறான பிரச்சனைகளுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமையும்முகங்கொடுத்து வருகின்றது. நாங்கள் எங்கள் பிள்ளைகளை நல்ல மார்க்க கல்வியோடு நல்ல ஒழுக்கத்தோடுவளர்த்துக்கொள்ள வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. நமக்கு முன்னாலிருக்கின்ற சவால்கள் நாங்கள் செய்யாத தவறு செய்ததாக திணிக்கின்றார்கள். எங்களைஅநியாயமாக வம்புக்கிழுக்கின்றார்கள். எங்கள் மார்க்கம் சொத்துக்கள் எங்கள் மீதும் எதிர்காலத்தின் மீதும்கை வைத்து எங்களைச் சீண்டுகின்ற அநாகரீகமான செயல் தொடர்ந்து திட்டமிட்டு நடந்துகொண்டிருக்கின்றது. இதற்குப் பின்னால் சில சக்திகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதனைத்தடுத்து சவால்களுக்குமுகங்கொடுக்கின்ற நல்ல கலாசாரம் ஒழுக்கமுள்ள சக்தியுள்ள நேர்மையுள்ள அறிவுள்ள ஆற்றலுள்ளசமுதாயத்தை வளர்தெடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு நமக்கிருக்கின்றது. இதுவிடயத்தில்  ஊடவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள்  ஊடகத்தர்மத்தைப் பேணிச் செயற்படவேண்டும் என்றார்.

Read More

உயிரை தவிர இழப்பதற்கு ஏதும் இல்லாத நிலையினை பார்த்து அனுபவித்த மக்கள் நாம்  என்பதை  மறந்து விடக்கூடாது வவுனியாவில் றிப்கான் பதியுதீன் 

கைத்தொழில் மற்றும் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி தொழிற் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி…

Read More

யாரையும் வீழ்த்துவதற்காக அ.இ.ம. காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் தடம்பதிக்கவில்லலை கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்

அம்­பாறை மாவட்­டத்தில்  யாரையும் வீழ்த்த வேண்டும் என்­ப­தற்­காக அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்சி தடம் பதிக்­க­வில்லை. இம்­மா­வட்­டத்தில் உள்ள நமது மக்கள் பெற…

Read More

முறைகேடான வர்த்தக  நடவடிக்கையில் ஈடுபட்ட பாகிஸ்தான் பிரஜைகள் கைது!!!

கொழும்பு 12 இல் உள்ள  வீடொன்றை சுற்றிவளைத்த நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த பாகிஸ்தான் பிரஜைகள் மூவரை நேற்று…

Read More

நீண்டகால அகதிகளின் பிரச்சினை தீர, மேலுமொரு  அமைச்சரவை பத்திரம்.    இரு வார காலத்தினுள் தரவுகளை கோருகிறார் அமைச்சர் றிஷாட்.

நீண்டகால அகதிகளாக இடம்பெயர்ந்து இன்னும் மீள் குடியேறாது அவதிப்படுபவர்களுக்கு விமோசனம் பெற்றுக்கொடுக்கும் வகையில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை   தயாரிக்க இருப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்தெரிவித்தார். கிண்ணியாவில் இடம்பெற்ற நிகழ்வென்றில் உரையாற்றிய போது இந்த தகவலை வெளியிட்ட அமைச்சர் ரிஷாட்பதியுதீன், தனது இந்த முயற்சிக்கு ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், சிறிலங்கா சுதந்திரக்கட்சி, அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளும் அரசியல்வாதிகளும்  உதவ வேண்டும் எனவும்பகிரங்க வேண்டுகோள் விடுத்தார். மீள் குடியேறாத மக்களின் காணிப்பிரச்சினை, வீ ட்டுப்பிரச்சினை மற்றும்  மலசலகூடப்பிரச்சினை, குறித்த தரவுகளைசேகரித்து பட்டியலிட்டு இரண்டு வார  காலத்தினுள் தருமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.அத்துடன் அரசியல் கட்சிகளின்பிரதிநிதிகள் மாத்திரமின்றி  ஜம்மியத்துல் உலமா உட்பட சமூகம் சார்ந்த சிவில் அமைப்புக்கள்,நிறுவனங்களும் இதற்கு  உதவேண்டும் என அவர்மேலும் கோரினார்.

Read More