Breaking
Mon. May 20th, 2024

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் உப தலை­வரும் முன்னாள் மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தை சுட்டு படு­கொலை செய்­தமை, தொடர்பில் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்ட கிழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்­சரும் தமிழ் மக்கள் விடு­தலைப் புலிகள் கட்சியின் தலை­வ­ரு­மான சிவ­னே­ச­துரை சந்­தி­ர­காந்தன் (பிள்­ளையான்) 90 நாள் தடுப்புக் காவல் விசா­ர­ணை­க­ளுக்கு முகம் கொடுக்கும் சாத்­தியம் உள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் தெரிவிக்­கின்­றன.

கடந்த ஞாயி­றன்று கைது செய்­யப்­பட்ட அவ­ரிடம் முன்னாள் எம்.பி. பர­ரா­ஜ­சிங்­கத்தின் கொலை தொடர்பில், புல­னாய்வுப் பிரிவின் மனிதப் படு­கொ­லைகள் தொடர்­பி­லான விசா­ரணைப் பிரி­வுக்கு பொறுப்­பான உதவி பொலிஸ் அத்­தி­யட்­சரின் கீழ் நேற்று மாலை­யாகும் போதும் விஷேட விசா­ர­ணைகள் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்த நிலையில் பாது­காப்பு அமைச்­சிடம் 90 நாள் தடுப்புக் காவ­லுக்­கான அனு­ம­தியை கோரு­வதா இல்­லையா என 72 மணி நேர விசா­ர­ணையை அடுத்து தீர்­மா­னிக்­கப்­படும் என பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி நத்தார் சிறப்பு ஆரா­த­னை­களின் போது மட்­டக்­க­ளப்பு, தேவா­லயம் ஒன்றில் வைத்து முன்னாள் எம்.பி. ஜோசப் பர­ராஜ சிங்கம் அடையாளம் தெரி­யாத ஆயு­த­தா­ரி­களால் சுட்­டுக்­கொலை செய்­யப்­பட்­ட­துடன் அவ­ரது மனைவி உள்­ளிட்ட 8 பேர் சம்­ப­வத்தில் காயங்­க­ளுக்கு உள்­ளா­கினர்.
இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் உத்­த­ர­வுக்கு அமைய குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்ன, அதன் பணிப்­பாளர் சுதத் நாக­ஹ­முல்ல ஆகி­யோரின் மேற்­பார்­வையில் புல­னாய்வுப் பிரிவின் மனிதப் படு­கொ­லைகள் தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவு விஷேட விசா­ர­ணை­களை நடத்­து­கின்­றது. தொடர்ந்தும் நான்காம் மாடியில் தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார். இந் நிலையில் மிக நீண்ட விசா­ர­ணை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ள பிள்­ளை­யா­னிடம் நேற்று மாலை­யாகும் போதும் பல தக­வல்­களை புல­னாய்வுப் பிரி­வினர் வெளிப்­ப­டுத்­திக்­கொண்­டுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் பிள்­ளை­யான் கைது செய்­யப்­பட்­டுள்ள நிலையில் நேற்று மாலை 6.15 ஆகும் போது கைதாகி 48மணி நேரமே நிறை­வ­டைந்­தி­ருந்­தது. அதன்­படி பொலி­ஸா­ருக்கு பிள்­ளை­யானை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசா­ரிக்க அனு­ம­தி­யுள்ளது இன்று பெரும்­பாலும் பாது­காப்பு அமைச்சு ஊடாக 90 நாள் தடுப்புக் காவல் அனு­மதி பெறப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

பிள்­ளை­யா­னிடம் நேற்று மாலை வரை வெளிப்படுத்திக்கொள்ளப்பட்ட தகவல்க ளுக்கு மேலதிகமாக மேலும் பல விஷேட தகவல்கள் வெளிப்படுத்திக்கொள்ள வேண்டி உள்ளதால், பெரும்பாலும் விசா ரணைக்கு 72 மணி நேரம் போதாமல் போக லாம் எனவும் அதனால் 90 நாள் தடுப்புக் காவல் உத்தரவு பெற்றுக்கொள்ளப்படலாம் எனவும் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *