Breaking
Thu. Nov 13th, 2025

இலங்கை வரலாற்றில் முதலாவாவது இஸ்லாமிய பூர்வீக நூதனசாலை இன்று காத்தான்குடி நகரில் திறந்து வைக்கப்பட்டது.

கலாச்சார மரபுரிமைகள் அமைச்சின அனுசரணையுடன் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் வழிகாட்டலில் பல மில்லியன் ரூபாய் செலவில் 4 மாடிகளுடன் இந்த நூதனசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் இலங்கை முஸ்லிம்களுடன் தொடர்புபட்ட ஆன்மீக, அறிவியில், வர்த்தக, வணக்கவழிபாடு, அரசியல் உட்பட பல்வேறு வரலாற்று சான்றுகள் இந்நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளன. பராக்கிரமபாகு மன்னரின் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த முஸ்லிம்களின் உருவங்களும் பதிவாக வைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள், உணவு பழக்க வழக்கங்கள், வியபாரா முறைகள், புராதன பள்ளிவாயல்கள், முதலாவது வுளு செய்த இடம் உட்பட பல நூறு முஸ்லிம் சமூகம் தொடர்பான பூர்வீக அடையாளங்களும் இங்கு காணப்படுகின்றன.

 5 4 3 2 1

Related Post