
janasa





முஹம்மத் நிஷாத் குவைதில் வபாத்!
-ஹரீஸ் ஸாலிஹ் – மினுவாங்கொடையைச் சேர்ந்த சகோதரர் முஹம்மத் நவ்ஷாத் அவர்களின் செல்வப் புதல்வர் 19 வயதுடைய முஹம்மத் நிஷாத் மோட்டார் சைக்கிள் விபத்தொன்றினால் குவைத் நாட்டில் காலமானார் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேற்று (22) திங்கட்கிழமை அஸர் தொழுகையைத் தொடர்ந்து, குவைத் சப்ஹான் மையவாடியில் இடம்பெற்றது அல்லாஹ் அவரின் குற்றம் குறைகளை மன்னித்து மேலான சுவர்க்கத்தை வழங்குவானாக..!

மக்காவில் இலங்கையர் வபாத்
-எம்.எம்.அஹமட் அனாம் – ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக சவூதி அரேபியாவிலுள்ள மக்காவுக்குச் சென்ற இலங்கையர் ஒருவர், மாரடைப்புக் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு, வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை பகுதியைச் சேர்ந்த எஸ்.எல்.ஹயாத்து முஹம்மட் (வயது 67) என்பவர் மார்க்கக் கடமையில் ஈடுபட்டிருந்தபோதே, உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். இவர் தனது மனைவியுடன் மக்காவுக்கு கடந்த வாரம் சென்றிருந்தார். இவரது ஜனாஸா நல்லடக்கம் மக்காவில் இடம்பெறவுள்ளதாக உறவினர்கள் கூறினர்.

பள்ளியிலிருந்து வெளியேறியவர் பலியான பரிதாபம்
-க.கிஷாந்தன் – வெலிமடை குருதலாவ பிரதேசவாசி ஒருவர் வழமையான தொழுகையை முடித்துவிட்டு பள்ளிவாசலிலிருந்து வெளியேறிய போது கால் தவறி 20 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று வெலிமடை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெலிமடை குருதலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருதலாவ ஜீம்மா பள்ளிவாசலில் நேற்று மாலை தனது வழமையான தொழுகையை முடித்துவிட்டு பள்ளிவாசலிலிருந்து வெளியேறிய போது பள்ளி வளாகத்தில் உள்ள பாதுகாப்பற்ற…

உணவு விஷமானது: முஸ்லிம் சிறுமி பலி
– பதுர்தீன் சியானா – அநுராதபுரம், கஹடகஸ்திகிலியப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈத்தல்வெட்டுனுவெவப் பகுதியில், உணவு விஷமானதால் ஏழு வயதுடைய சிறுமி பலியானதுடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர், நேற்று புதன்கிழமை (20) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு உயிரிழந்த சிறுமி, கஹடகஸ்திகிலிய – ஈத்தல்வெட்டுனுவெவ முஸ்லிம் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் எம்.மஹீஸா (வயது 7) எனவும் குறித்த சிறுமியின் தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சிறுமியின்…

வாயில் கலிமாவுடன், உயிரைநீத்த மத்ரஸா மாணவர் – அக்குறணையில் சம்பவம் (படங்கள்)
Ash-Sheikh TM Mufaris Rashadi- நேற்று முன்தினம் (16) வாயில் கலிமாவுடன் உயிரை நீத்த இலங்கை அக்குரனை என்ற ஊரைச் சேர்ந்த மத்ரஸா மாணவர் சகோ உமர் பின் அமீன் அவர்களின் ஜனாஸா தொழுகையின் போது அலை மோதிய மனித வெள்ளமே இது. நல்லவர்களின் மரணம் கூட பிறரை நல்லவர்களாக்கத் தூண்டுகிறது. அவர்கள் மரணிப்பதில்லை, வாழ ஆரம்பிக்கிறார்கள்… நேற்றைய எனது பயணத்தில் அக்குரணையை எட்டிப் பார்த்து பள்ளியில் இஜ்திமாவா ? என்றேன்.. இல்லை. ஷேக் அவரது ஜனாஸாவிற்கு…

யானை தாக்கி கிண்ணியா அப்துல் மஜீத் ரகீப் வபாத்
திருகோணமலை, கிண்ணியாப் பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி அப்பிரதேசத்தைச் சேர்ந்த 03 பிள்ளைகளின் தந்தையான அப்துல் மஜீத் ரகீப் (வயது 36) என்பவர் வபாத்தானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். மேற்படி பிரதேசத்தில் உள்ள மணியரசன்குளத்தில் மீன்பிடித்துக்கொண்டு 03 பேர் நேற்று (29) புதன்கிழமை இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். இதன்போது, வழியில் மேற்படி நபரை யானை தாக்கிய வேளையில் ஏனைய 02 பேரும் தப்பியோடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எம்.எச்.முஹம்மதின் மறைவு: அமைச்சர் றிஷாத் அனுதாபம்
– ஊடகப் பிரிவு – மூத்த அரசியல்வாதியும், சமூக சேவையாளருமான முன்னாள் சபாநாயகர் எம்.எச்.முஹம்மதின் மறைவு நாட்டு மக்களுக்கு பாரிய இழப்பாகும் என்று அமைச்சர் றிசாத் தெரிவித்தார். எம்.எச்.முஹம்மதின் மறைவையொட்டி அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது,, முன்னாள் சபாநாயகர் எம்.எச்.முஹம்மத், ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர். கட்சியில் நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம் அவர் கை கொடுத்து உதவியவர். அக்கட்சியின் முன்னாள் தலைவர்களுடன் மிக நெருக்கமாக செயற்பட்டு, அக்கட்சியை வழி நடத்தியவர். பல்வேறு அமைச்சுப் பொறுப்புக்களில்…

முன்னாள் சபாநாயகர் எம்.எச்.முஹம்மத் வபாத்
– ஏ.எஸ்.எம்.ஜாவித் – முன்னாள் சபாநாயகரும், இலங்கையின் மூத்த முஸ்லிம் அரசியல்வாதியுமான எம்.எச்.முஹம்மத் கடுமையாக சுகயீனமுற்று இருந்த நிலையில் இன்று (26) காலை காலமானார். 1921ம் ஆண்டு பிறந்த எம்.எச். முஹம்மத், 1956ம் ஆண்டு கொழும்பு மாநகர சபையினூடாக அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த அவர் கொழும்பு மேயர், பொரளைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் , சபாநாயகர் என்று பல பதவிகளை அலங்கரித்துள்ளார். கொழும்பின் அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்புகளை வழங்கியுள்ள அவர், முஸ்லிம் சமூகத்தின் கல்வி, பொருளாதார…
- 1
- 2