Headlines

முஸ்லிம்களின் பிரச்சினைகள் சர்வதேசத்தை நோக்கி: ஏகபிரதிநிதியாக றிஷாத்

-இப்னு ஜமால் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன், இலங்கை முஸ்லிம்களின் ஏகபிரதிநிதியாக செயற்பட்டுவருவதை அரவது துணிச்சல் மிக்க  முன்னெடுப்புக்கள் கட்டியம் கூறுகின்றன. அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்களின் குரல் வளைகள் எங்கெல்லாம் நசுக்கப்பபடுகின்றதோ அங்கெல்லாம் ஓங்கி ஒலித்த ரிசாத் பதியுதீனின் குரல் இன்று சர்வதேசத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளமை இதற்கு சாண்றாக அமைந்துள்ளது. இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் செலயலாளர் நாயகம் பாங்கி மூனை ரிசாத்…

Read More

தலைவிரித்தாடும் இனவாதம்

இலங்கை  பல்லின மக்கள் வாழும் ஒரு நாடாகும்.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒவ்வொரு இன மக்களும் வெவ்வேறு நோக்கங்களோடு மைத்திரியை ஆதரித்திருந்தார்கள்.இதில் பேரின மக்கள் நாட்டின் பொது விடயங்களில் மஹிந்த ராஜ பக்ஸவின் போக்கை ஏற்றுக் கொள்ளாது அவரை எதிர்த்திருந்தனர்.இன்றுள்ள ஆட்சி மலர்ந்ததன் பிற்பாடு பத்தொன்பதாம் சீர் திருத்தம்,அரசியலமைப்பு மாற்ற முயற்சி,ஊழல் செய்தோரை குறைந்தது விசாரனைக்காவது அழைக்கின்றமை போன்ற விடயங்களில் இவ்வரசு பூரண திருப்தியுறும் வகையில் செயற்படாது போனாலும் இதையாவது செய்கிறார்களேயென மனதைத் தேற்றிக் கொள்ளும் வண்ணம் செயற்படுகிறது….

Read More

ஐ.எஸ் இயக்கத்தை உருவாக்கியவர் ஒபாமாவா?

-எம்.ஐ.முபாறக் – உலகின்  அதி பயங்கரவாத அமைப்பாக இன்று அடையாளங் காணப்பட்டிருப்பது ஐ.எஸ் அமைப்புதான்.இந்த அமைப்பின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள்-மனிதக் கொலைகள் எந்தவொரு மனிதனாலும் சகிக்க முடியாத அளவுக்கு கொடூரமானவை. தூய இஸ்லாத்தைப் பரப்புகின்றோம் என்றும் இஸ்லாமிய ஆட்சி முறையை நிறுவப் போகிறோம் என்றும் கூறிக்கொண்டு முழுக்க முழுக்க இவற்றுக்கெல்லாம் எதிராகத்தான் இந்த அமைப்பு செயற்படுகின்றது.இதன் அமைப்பின் உண்மையான நோக்கம்-இதன்  பின்னணி தெரியாத ஐரோப்பாவைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் இதில் இணைந்துகொள்கின்றனர். 2014 உருவான இந்த அமைப்பு சிரியாவின்…

Read More

பாத யாத்திரை: எதைப் பிடுங்கப் போகிறீர்? (Article)

-எம்.ஐ.முபாறக் – நீண்ட காலமாக ஊழல்,மோசடிமிக்க ஆட்சியை நடத்தி அதன் ஊடாக இஷ்டம்போல் சுகபோக வாழ்க்கையை அனுபவித்த மஹிந்த தரப்பால் ஆட்சி, அதிகாரம் இல்லாமல் வாழ்வது மிகவும் கஷ்டமான காரியமாகும். எதையாவது செய்து ஆட்சியை மீண்டும் கைப்பற்ற வேண்டும்அதே பழைய ஊழல் ஆட்சியை நிறுவி பழைய சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பதில் அவர்கள் குறியாகவே இருக்கின்றனர். தங்கள்மீது எத்தனையோ குற்றச்சாட்டுக்கள் இருந்தும்கூட-அதற்கான ஆதாரங்கள் இந்த அரசிடம் உள்ளபோதிலும் கூட, இந்த அரசை ஊழல், மோசடிமிக்க அரசாகக்…

Read More

துருக்கி இராணுவ புரட்சி தோல்வி! இஸ்லாத்தின் எதிரிகளுக்கு கிடைத்த படுதோல்வி

துருக்கியில் இராணுவ புரட்சி என்ற போர்வையில் இஸ்லாத்தின் எழுச்சிக்கு எதிரான சதித்திட்டமொன்று முறியடிக்கப்பட்டுள்ளது. உலகின் எந்த நாட்டிலோ அல்லது ஏதாவது ஒரு மூலையிலோ இஸ்லாம் எழுச்சி பெற்றால் அதனை அடக்கி ஒடுக்க அதற்கு எதிராக அந்த நாட்டு இராணுவத்தினர்களை அல்லது எதிர் கட்சிகளை தூண்டி விடுவதும் அவைகள் தோல்வி அடையும் பட்சத்தில் புதிதாக ஆயுத இயக்கங்களை அந்நாட்டு அரசுக்கு எதிராக உருவாக்குவதும் அதற்காக பாரியளவில் பணத்தினை செலவழிப்பதும் வரலாற்று ரீதியாக உலகில் நடைபெற்று வருகின்ற நிகழ்வுகளாகும். சிதைவடைந்த…

Read More

முஸ்லிம்களிடம் எடுபடுமா சம்பந்தனின் கோரிக்கை?

– எம்.ஐ.முபாறக் – தமிழ்-,முஸ்லிம் மக்களுக்குப் பெரும் சாபக்கேடாக இருந்து வந்த மஹிந்தவின் ஆட்சி கவிழ்ந்தது முதல் இந்த  மக்கள் ஓரளவு நிம்மதிப் பெரு மூச்சை சுவாசிக்கத் தொடங்கினார்கள் என்றால் அதை மறுப்பதற்கில்லை.முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த பேரினவாதம் ஓரளவு முடிவுக்கு  வந்தது.தமிழர்களின் ஓரிரு பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டன. அதேபோல்,இந்த வருடத்துக்குள்  அரசியல் தீர்வு  வழங்கப்படும் என அரசு அரசு அறிவித்துள்ளமையால்  இந்த வருடத்தையும் மேலும் நம்பிக்கையூட்டும் வருடமாக  சிறுபான்மை இன மக்கள் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கின்றனர்.அது அனைத்து இன…

Read More

“இஸ்லாத்தை அறிவோம்”

-பாத்திமா மைந்தன்-       எல்லாப் புகழும் இறைவனுக்கே ‘இன்ஷா அல்லாஹ்’ (இறைவன் நாடினால்) என்ற சொல்லைப் போல அன்றாட வாழ்க்கையில் முஸ்லிம்கள் பயன்படுத்தும் பொருள் செறிவுள்ள வார்த்தைகள் பல உள்ளன. எந்த ஒரு செயலைச் செய்தாலும், அதைத் தொடங்குவதற்கு முன்பு, முஸ்லிம்கள் சொல்லும் வார்த்தை, ‘பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.’ இதற்கு அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் தொடங்குகிறேன் என்று பொருள். ஆச்சரியத்தைத் தரக்கூடிய பொருளைப் பார்க்கும்போது சொல்ல வேண்டிய சொல், ‘சுப்ஹானல்லாஹ்’ (இறைவன் மிகவும்…

Read More

நில உரிமையும் நில மீட்பும்

நிலத்தில் நன்கு அக்கறை செலுத்துங்கள். அது உங்கள் பெற்றோர்களால் கொடுக்கப்பட்டதல்ல. அது உங்கள் சந்ததிகளால் உங்களுக்கு கடனாக கொடுக்கப்பட்டதாகும். நிலம் நம்முடைய முன்னோர்களிடம் இருந்து வாரிசுரிமை பெற்றதல்ல. எங்கள் குழந்தைகளிடம் இருந்து கடன் பெற்றதேயாகும்’;. மேற்கூறிய வார்த்தைகள் அமெரிக்க செவ்விந்தியர்களால் 1700 களில் கூறப்பட்ட உபதேசங்களாகும். இக்கூற்று நிலத்தின் பெறுமதியை வெளிக்காட்டுவதோடு , நிலமானது எதிர்கால சந்ததிகளின் உடமைகள் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. மனிதன் நீரிலோ, ஆகாயத்திலோ வாழ முடியாது. வாழ்வதாயின் அவன் நிலத்திலேயே வாழ்ந்து தீர…

Read More

காய்க்கும் மரம்தான் கல்லடி படும்

– முயினுதீன் அசாருதீன் – “காய்க்கும் மரம்தான் கல்லடி படும்” இந்தக் கூற்று அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கே ரொம்பப் பொருத்தமானது. அரசியலில் அவர் மீது பொறாமையும், எரிச்சலும் கொண்ட சக்திகள் அவருக்கு தொடர்ந்து பிரச்சினைகளை கொடுத்துக்கொண்டே இருக்கின்றனர். இல்லாத பொல்லாத பொய்களைக் கட்டிவிட்டு அவரை எப்படியாவது அரசியலில் இருந்து ஓரங்கட்டப் பார்க்கின்றனர். புலிகளால் துரத்தப்பட்ட வடக்கு முஸ்லிம்களை மீளக் குடியமர்த்தும் செயற்பாட்டில் அவர் ஈடுபட்ட போது, தமிழ்ப் பேரினவாதிகள் கொடுத்த கரைச்சல் எண்ணற்றவை. முசலி மக்கள் தமது…

Read More

ரமளான் நோன்பின் மூலம் சான்று பகிரக் கூடிய சமூகமாக மாறுவோம்

– எம்.எல்.பைசால் (காஷிபி)- Qatar – உலகிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் நாளை அல்லது நாளை மறுநாள் நோன்பினை நோற்கவுள்ளனர். இச்சந்தர்ப்பத்தினை தனிமனிதன் சென்ற ரமளானில் விட்ட தவறுகளை நிவர்த்திக்க எதிர் வரும் காலத்தினை பயன் படுத்த வேண்டும் என உறுதி கொண்டு நற்கிரியைகளுடன் தம்மை இணைத்து உளரீதியானதும், பௌதீக ரீதியானதுமான ஆயத்தங்களில் ஈடுபடுகின்றான். அதேவேளை சமூகத்திலுள்ள அமைப்புகளும், மஸ்ஜிதுகளும் ரமளானுக்கான செயற்பாடுகளில் அதிகம் கவனம் செலுத்துகின்றன. உறங்கு நிலையில் இருந்த மஸ்ஜித் நிருவாகங்கள் உச்சாகத்துடன் மஸ்ஜிதுகளை சுத்தப்படுத்துவது முதல்…

Read More

நோன்பின் சில சட்ட திட்டங்கள்.. (கட்டாயம் வாசிக்கவும்)

நோன்பு என்றால் மொழிரீதியில் “தடுத்துக்கொள்ளல்”,எனும் கருத்தை கொண்டது.மார்க்க ரீதியில் “சூரிய உதயம் முதல் அது மறையும் வரை நோன்பை முறிக்கும் காரியங்களை விட்டும் அல்லாஹ்வுக்காக ஒரு வணக்க ரீதியில் தடுத்துக்கொள்ளல்”.என்பதாகும்.இது இஸ்லாதின் அடிப்படை வணக்கங்களில் ஒன்று.இதை அல்லாஹ் அவனது அடியார்கள் மீது கடமையாக்கியுள்ளான்.அல்லாஹ் குறிப்பிடும் போது.”ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதியாக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் பயபக்தி உடையோராக  ஆகலாம்.)2:185(.இதை நபிகயளார் குறிப்பிடும் போது “இஸ்லாம் ஐந்து…

Read More

இறைவன் நமக்கு தந்த, ஒரு வாய்ப்பாக இதனை கருதுவோம்…!

– ARM INAS – வெள்ளத்தால் பாதிக்கப்பட்வர்களின் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ளம் போல் திரண்டு வந்து உதவி செய்கிறார்கள் மனிதநேயர்கள். குறைந்தது இரண்டு மாதங்களுக்குள்ளாவது பாதிக்கப்பட்ட வீடுகள் முழுமையாக சீரமைக்கப்பட்டுக் கொடுக்கப்படும் போல் தெரிகிறது. இழப்புக்களுக்கான நஷ்டஈடுகளும் கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் அதிகமாகத்தான் உள்ளது. ஏதோ ஒரு வகையில் மீண்டுவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. நாம் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும்.. நாம் அனர்த்தத்தின் போது வாழ்ந்தது போன்ற…

Read More