தபால் திணைக்களப் பிரச்சினைகள் குறித்து விசேட கலந்துரையாடல்
தபால் திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க சம்மேளன ஒன்றியம் தெரிவித்துள்ளது. தமது பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட மேலதிக செயலாளருடனேயே இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தபால் தொழிற்சங்க சம்மேளன
மட்டுவில் தொடரும் யானைகளின் அட்டகாசம்!
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட திக்கோடைக் கிராமத்தில் நேற்று அதிகாலையில் காட்டுயானை புகுந்து கைவரிசையினை மீண்டும் காட்டியுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருதாவது, நேற்று (16) அதிகாலையில் திக்கோடை பாடசாலைக்கு முன்பாக உள்ள தங்கத்துரை திருக்கணேசன் என்பவரது அரிசி
மீன் ஏற்றுமதி தடை நீங்கும் சாத்தியம்?
இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டக் குழுவினர் இன்று கடற்றொழில் அமைச்சரை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் ஆராய இந்த இலங்கை வந்துள்ளது.
யோசித்தவின் தொலைக்காட்சி நிலையத்தில் பல மணித்தியால சோதனை
ஒலி, ஒளிபரப்பு ஒழுங்கு முறைகளை மீறிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் (கடற்படை அதிகாரி) யோசித்தவின் சி.எஸ்.என் தொலைக்காட்சி நிலையத்தை நேற்று பொலிஸ் நிதிமோசடி பிரிவினர் சோதனையிட்டனர். கொழும்பின் புறநகர் பத்தரமுல்லையில் இந்த தொலைக்காட்சி நிலையம் அமைந்துள்ளது.
மக்கள் கடுமையான பொருளாதார சிக்கலுக்கு முகம்கொடுத்துள்ளனர்: மஹிந்த
மக்கள் கடுமையான பொருளாதார சிக்கலுக்கு முகம்கொடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மத நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வேகமாக வாழ்க்கை செலவு உயர்கின்றதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கிடையில் தற்போதைய அரசாங்கத்தை
பிரான்ஸ் தாக்குதலின் எதிரொலி; உலக பொருளாதாரம் வீழ்ச்சியடையும்
பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் கடந்த வெள்ளிக்கிழமை இடம் பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து உலக பொருளாதாரம் பாரிய பின்னடைவை சந்திக்கும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த தாக்குதல் காரணமாக ஐரோப்பாவின் சுற்றுலாத்துறை பாரிய வீழ்ச்சியை சந்திக்க கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுவதாக
ஐ.எஸ். களுக்கு எதிராக மாபெரும் சைபர் தாக்குதல்: இணையப் போராளிகள் எச்சரிக்கை
பாரிஸ் தாக்குதலில் பலியான 129 பேருக்கு ஆதரவாகவும், ஐ.எஸ். அமைப்பின் செயலைக் கண்டித்தும் உலகின் பல மூலைகளில் வசிப்போரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், ஐ.எஸ்.களை எதிர்த்து போரிடப் போவதாக ‘அனானிமஸ்’ என்ற பெயரில் பெயரை வெளியிடாமல் செயல்பட்டுவரும் இணையப் போராளிகள்
மகாத்மாவை படுகொலை செய்தவனுக்கு இந்தியாவில் வீரவணக்கம்!
இந்தியாவின் தேச தந்தை மகாத்மா காந்தியை சுட்டுப் படுகொலை செய்த கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளான நேற்று இந்து மகாசபை வீரவணக்கம் செலுத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாத்மா காந்தியை 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதியன்று துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தவன் கோட்சே.
தென்னாபிரிக்கா பயணமானார் சந்திரிகா
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தென்னாபிரிக்காவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். “ஐக்கிய நாடுகள் அமைதியை கட்டியெழுப்பும் நிதியின் பொறுப்புக்கூறல்” என்ற தொனிப்பொருளில் தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள கருத்தரங்கு ஒன்றில் சந்திரிகா பண்டாரநாயக்க உரையாற்றவுள்ளார். சந்திரிகா குமாரதுங்க இலங்கையின் சமாதானம் நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கையெழுப்புதலில் பெற்றுள்ள அனுபவங்கள்
ஐ.எஸ். தாக்குதல்கள் விரைவில் இலங்கையில் இடம்பெறலாம் BBS
– க.கமலநாதன் – தற்போது பிரான்ஸில் நடந்துவரும் ஐ.எஸ். இயக்கத்தின் தொடர்ச்சியான தாக்குதல்கள் விரைவில் இலங்கையில் கொழும்பில் அல்லது கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரதேசங்களில் இடம் பெறலாம் என்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்தார்.
வெள்ள பாதிப்பு: அமைச்சர் றிஷாத் அதிகாரிகளுக்கு உத்தரவு
வவுனியா மாவட்டத்தில், வெள்ளத்தினால் பதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை தங்குதடையின்றி வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வவுனியா அரசாங்க அதிபர் மற்றும் அணர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகளுக்கு அமைச்சர் றிஷாத் பதியுதீன் உத்தரவு பிறப்பித்துள்ளார். நேற்று முன்தினம் (16) கைத்தொழில்,