வாக்குவாதம் செய்த தயாசிறி – வெல்கம
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற ஸ்ரீ.சுதந்திரக் கட்சி மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும், நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் கடுமையாக வாக்குவாதப்பட்டுக் கொண்டதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தக்
நல்லாட்சிக்கமைய செயற்படுகின்றேன்: நிமல் சிறிபால
நல்லாட்சியில் எதுவும் மீதமில்லை என அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மீண்டும் நல்லாட்சிக்கமைய செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார். நேற்று போக்குவரத்து தொழிற்சங்கங்க பிரதிநிதிகள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்குவது நல்லது
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது குறித்த தீர்மானம் சிறந்தது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று அனுராதபுரத்தில் தனது 70 ஆவது பிறந்த நாள் சிறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
ரஷ்ய விமானத்தை தகர்ப்பதற்கு ISIS வைத்த வெடி குண்டு!
– கலையரசன் – எகிப்து, சினாய் பாலைவனத்தில் வீழ்ந்த ரஷ்ய விமானத்தை தகர்ப்பதற்கு, ISIS பயன்படுத்திய வெடி குண்டு இதுதானாம். இந்தத் தகவலை, ISIS இயக்கத்தின் உத்தியோகபூர்வ இணைய சஞ்சிகையான Dabiq வெளியிட்டுள்ளது. அவர்கள் முதலில் ஒரு மேற்கத்திய விமானத்தை தகர்ப்பதற்கு திட்டமிட்டதாகவும்
அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க அமைச்சர் றிஷாத் நடவடிக்கை
புது வருடத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளை வர்ததக, கைத்தொழில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் குறைத்துள்ளார். . இதன்படி. மைசூர் பருப்பு ஒரு கிலோ 190 ரூபாவாகவும், கிழங்கு ஒரு கிலோ 145 ரூபாவாகவும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 155 ரூபாவாகவும் விலைகள்
அமெரிக்கா உடனான இருதரப்பு வர்த்தகத்தில் 13% அதிகரிப்பு!
“2014 ஆம் ஆண்டில் அமெரிக்கா உடனான இருதரப்பு வர்த்தகத்தில் எமது தரப்பில் 13% அதிகரிப்பை காணக்கூடியதாக இருந்தது” என அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பு, கலதாரி ஹோட்டலில் இடம்பெற்ற அமெரிக்க வர்த்தக கண்காட்சி 2015 (US Trade Show 2015) ஆரம்ப
முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்துள்ள பாரிஸ் பெரிய பள்ளிவாசல்
பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பாரிஸ் பெரிய பள்ளிவாசல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து இடம்பெறவுள்ள இவ் ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்கள் ஒருபோதும்
களனி பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
களனி பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 21 கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறுவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயம்
மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் சிறுவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்த வீதி பாதுகாப்பு தொடர்பிலான தேசிய சபை தீர்மானித்துள்ளதாக சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் (வீடியோ இணைப்பு)
– A.R.A.பரீல் – நாட்டில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காது நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதே ஆட்சியாளர்களின் கடமையாக இருக்க வேண்டும். ஆனால், இலங்கையில் மீண்டும் தீவிரவாதிகளின் ஆதிக்கத்துக்கு இடமளிக்கப்பட்டு வருகிறது. அதனால், நாட்டின் தேசிய பாதுகாப்பினை உறுதி செய்து பிரச்சினைகளைத் தீர்க்காதுவிடின்
கல்வி அதிகாரிகள் கூஜா தூக்கிகளாக இருக்ககூடாது – அமீரலி
– அபூ செய்னப் – கல்வி அதிகாரிகள் அரசியல்வாதிகளின் கூஜா தூக்கிகளாக இருக்ககூடாது ஆனால் அப்படிப்பட்ட அதிகாரிகள் எமது மாவட்டத்தில் அதிகம் காணப்படுகிறார்கள். இதனை நினைக்கும் போது மிகுந்த கவலையாக இருக்கிறது இவ்வாறான அதிகாரிகளின் மோசமான பக்கச் சார்பான நடவடிக்கைகளினால் எதிர்கால கல்விப்பரம்பரையினரான