Breaking
Fri. Dec 5th, 2025
உலக வாழ் முஸ்லிம்கள் தங்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பை நோற்று முழு இறை திருப்தியோடு  பெருநாளை கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள் என  திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
அல்குர் ஆன் அருள் பெற்ற மாதம்  , பத்ர் யுத்த தியாக  வெற்றி போன்றவற்றை ஞாபகபடுதுகின்ர இம்மாததில் நாம் செய்கின்ற நற்செயல்களுக்கு பல மடங்கு நன்மைகளை அல்லாஹ் எமக்கு அளிக்கின்றான் அத்தோடு நாம் செய்த தவறான விடயங்களுக்கு இம்மாதத்தில் பாவமன்னிப்பை பெறுவதற்கான சந்தர்பத்தை அல்லாஹ் எமக்கு ஏற்படுத்தியிருக்கிறான்  அந்த வகையில்
அல்லாஹ்வின் இறை கட்டளைக்கு அஞ்சி  முகம்மது நபி  (ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரியான வழிகாட்டல்கலின் அடிப்படையில்  நமது அனைத்து நடவடிக்கைகளையும் அமைத்து கொள்ளவேண்டும் இதிலேதான் இன்றைய காலகட்டத்தில் உலக வாழ் முஸ்லிம்கள்  அல்லாஹ்வின் அருளை பெறமுடியும்
இலங்கையில் பல்லின சமூகமாக  பல நூற்றாண்டுகள் வாழ்ந்து கொண்டு வரும் முஸ்லிம்கள்;  ஏனைய இனங்கள் மற்றும் சமயங்களைச் சேர்ந்த மக்களுடன் மிகவும் ஐக்கியமாகவும் அந்நியோன்யமாகவும்  வாழ்ந்து வரும் இத்தருனத்தில் நாட்டில் அமைதியான சூழ்நிலை நீடித்து நிலைபதட்கும்  சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் நாட்டின் சிறந்த எதிர்காலதிட்கும்   பங்களிக்கும் வகையில் உறுதி கொள்வோம்.
அத்தோடு நம்மை கடந்து சென்ற ரமழான் மாதத்தில் நாம் பெற்ற அனுபவங்களை எமது வாழ்கையில் கடைபிடித்து நல்ல சிந்தனைகளுக்கும் , நல்ல வாழ்க்கை முறைக்கும் துணையாக இருக்க எல்லாம் வல்ல இறைவை பிரார்த்திக்கிறேன்.
அப்துல்லாஹ் மஃறூப்-MP
 நாடாளுமன்ற உறுப்பினர்
திருகோணமலை மாவட்டம்

Related Post