செந்நெல் கிராமத்தில்  அபிவிருத்தி செயற்றிட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமனற உறுப்பினர் இஸ்மாயில் கலந்துகொண்டார்.

தனித்துவிடப்பட்டதும் மற்றும் குறைபாடுடையதுமான கிராமங்களை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டம் இன்று செந்நெல் கிராமத்திலுள்ள ஹிஜ்ரா வித்தியாலத்தில் இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி கௌரவ. எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்களின் நெறிப்படுத்தலில் கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

ஏற்கனவே சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தின் கீழுள்ள கிரமமொன்று இத் திட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட போதிலும் மீண்டும் இக் கிராமம் இத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கிழக்கு மாகாண சபையினால் ஒதுக்கப்பட்ட 10 பிரதேச செயலகங்களுக்கான 100 மில்லியன் பணத்தில் இரண்டாவது தடவையாகவும் கௌரவ ஆளுநரின் உதவியுடன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி. எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்களின் தலைமையில் குறித்த பிரதேசத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக அதிகாரிகள் உட்பட பிரதேச மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.