தம்பலகாமம் பிரதேச சபை வேட்பாளர்களுடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு-

தம்பலாகமம் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களுடனான சந்திப்பொன்று முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எச்.அலீபுல்லாஹ்வின் இல்லத்தில் நேற்று முன்தினம் (31) இடம்பெற்றது.

மக்கள் சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர். ஹில்மி மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தேர்தல் வியூகங்கள் மற்றும் வெற்றிக்கான நகர்வுகள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.