நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வேட்பாளர் மக்கள் காங்கிரஸில் இணைவு!

எம்.எஸ்.எம்.நூர்தீன்

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG)  ஏறாவூர் பற்று பிரதேச சபை தேர்தலில் மீராகேணி வட்டாரத்தில் போட்டியிடும் முகம்மட் அமீர் என்பவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.

மக்கள் காங்கிரஸின் ஏறாவூர் அமைப்பாளர் லத்தீப் ஹாஜியார் முன்னிலையில் இவர் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் நேற்றிரவு (15) இணைந்து கொண்டார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்ட அமீர், ஏறாவூர் பற்று பிரதேச சபை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருக்கு தான், ஆதரவு தெரிவிக்கப்போவதாகவும்,  நல்லாட்சிக்கான தேசிய முன்னணியிலிருந்து விலகி கொண்டதாகவும் தெரிவித்தார்.

இதன்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.