Breaking
Fri. Dec 5th, 2025

லிபியா அருகே படகு கவிழ்ந்ததில் 400 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.லிபியா பகுதியில் இருந்து புறப்பட்ட படகு ஒன்றில் சுமார் 540 பேர் வரை பயணம் செய்துள்ளனர்.

இத்தாலி நாட்டின் கடற்பகுதியில் படகு சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இத்தாலி கப்பல் படை வீரர்கள் சுமார் 140 பேர்களை மட்டும் உயிருடன் மீட்டனர்.

விபத்தில் இறந்து போனவர்களின் 9 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மாயமானோர் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.மேலும் பலியானவர்களில் பெரும்பாலும் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்களாக இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Related Post