வவுனியா மாவட்ட மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களுடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு-

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், வவுனியா மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக, ஐக்கிய தேசிய முன்னணியின் யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பொன்று நேற்று மாலை (03)  இடம்பெற்றது.

வவுனியா தம்பா ஹோட்டலில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு  உரையாற்றினார்.