விளையாட்டுக்கழக உறுப்பினர்களுடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான அமீர் அலியின் தலைமையில் ஐ.தே.க பட்டியல் வேட்பாளர் நஜிமுத்தீனின்  விளையாட்டுக் கழக உறுப்பினர்களுடனான சந்திப்பொன்று  நேற்று (23)மாலை இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலின் போது, ஐக்கிய தேசிய கட்சி பட்டியல் வேட்பாளர் நஜிமுத்தீன், செம்மண்னோடை பொது வேட்பாளர் ஹக்கீம் ஆசிரியரை ஆதரித்து  செயற்படவுள்ளதாக தனது கருத்தைத்  தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இளம் சட்டத்தரணி ராசிக், செம்மண்னோடை வட்டாரக் குழு தலைவர் சம்மூன்  மற்றும் தக்வா பள்ளிவாயல் நிருவாகிகளும் கலந்துகொண்டனர்.