வேட்பாளர் ஆதரிப்பு கூட்டம்.. டாக்டர்.ஹில்மி மஹ்ரூப் பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு-

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா நகரசபைத் தேர்தலில், ரஹ்மானிய வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்ரஸில் போட்டியிடும் வேட்பாளர் மஹ்தியை ஆதரித்த கூட்டம் நேற்று மாலை  (05) இடம்பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர். ஹில்மி மஹ்ரூபின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வேட்பாளர்கள், ஊர்ப்பிரமுகர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, வீடுகளுக்குச் சென்று வாக்குச் சேகரிக்கும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தகது.