புத்தளம் பிரதேச சபை வேட்பாளர் அலுவலகம் திறப்பு நிகழ்வில் நவவி எம்.பி பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு-

புத்தளம் பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் யானை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் றிபாஸ் நசீரின் தேர்தல் காரியாலயம் திறப்பு நிகழ்வு நேற்று (06) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.