Breaking
Mon. Dec 8th, 2025

 

அண்மையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றின்போது சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபா முன்வைத்த கோரிக்கை ஒன்றை நிறைவேற்றும் பொருட்டு, 50 வீடுகளை அமைத்துக்கொடுக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் இணக்கம் தெரிவித்து, அதற்கான நடவடிக்கைகளை எடுக்க கோரிய, அமைச்சரின் கடிதத்தை கையளிக்கும் நிகழ்வு 2017-06-26 ஆம் திகதி பெருநாள் தொழுகையைத் தொடர்ந்து சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

அமைச்சரின் சார்பில் குறித்த கடிதத்தை கலாநிதி ஏ.எம்.ஜெமீல் பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபாவிடம் கையளித்தார். குறித்த கடிதத்தில் 50 வீடுகளையும் நிர்மானிப்பதற்கான காணி மற்றும் வீடுகள் தேவைப்படுபவர்களது விபரங்கள் கோரப்பட்டுள்ளது. இங்கு கருத்துத்தெரிவித்த வை.எம்.ஹனிபா பள்ளி நிருவாகத்துடன் பேசி அதற்கான தகவல்களைப் பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்தார்.

பள்ளிவாசலின் சார்பில் அதன் தலைவர் வை.எம்.ஹனிபா 100 வீடுகள் தேவை என்று குறிப்பிட்டிருந்தார் அதில் 50 வீடுகளை அமைத்துக் கொடுக்க அமைச்சர் ஒத்துக்கொண்டிருந்ததும் குறித்த வீடுகள், வீடுகள் அற்ற திருமண வயதுள்ள பெண்களைக்கொண்ட வசதி குறைந்த குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Post