Breaking
Fri. Dec 5th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இறக்காமம் பிரதேச மக்கள் பணிமனை மக்களுக்காக சேவை செய்ய ஆரம்பித்துள்ளது. இதுவரை காலமும் இறக்காமம் பிரதேச மக்கள் தங்களது சேவையை பெற்றுக்கொள்ள சிரமப்பட்டனர்.

தற்பொழுது இந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்யும் முகமாக அ.இ.ம.கா இறக்காமம் பிரதேச சபை உப தவிசாளரும்,இறக்காமம் மத்திய குழு தலைவருமான A.L.நெளபர் மெளலவி மக்கள் பணிமனையை திறந்து வைத்துள்ளார்.

மக்கள் தங்கள் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளவும், சேவைகளை பெற்றுக்கொள்ளவும் சனி, ஞாயிறு தினங்களில் காலை முதல் மாலை வரையும், வாரநாட்களில் திங்கள், வெள்ளி தினங்களிலும் பிரதேச சபை உப தவிசாளர் காரியாலயத்தில் மக்கள் சந்திப்பு இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.

 

Related Post