கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நோயாளர்களை கொண்டு செல்லும் போது தங்களுக்கு அதிவேக வீதியை இலவசமாக பயன்படுத்த அனுமதிக்குமாறு அம்பியூளன்ஸ் சாரதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு மற்றும் குளியாபிட்டி பகுதிகளில் இருந்து அடிக்கடி நோயாளர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
ஆபாய கட்டத்தில் உள்ள நோயாளர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றவென சில அம்பியூளன்ஸ் சாரதிகள் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியை பயன்படுத்துகின்றனர்.
இதன்போது அதிவேக வீதிக்கு செலுத்த வேண்டிய அனுமதிக் கட்டணத்தை அம்பியூளன்ஸ் சாரதி, உதவியாளர், அல்லது நோயாளர் செலுத்த வேண்டியுள்ளது.
எனவே அவசர நேரங்களில் அதிவேக வீதியில் இலவசமாக செல்ல அனுமதி அளிக்குமாறு அம்பியூளன்ஸ் சாரதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

