அநுராதபுரம் பதவிய குளத்தில் மீன் குஞ்சிகள் விடும் நிகழ்வு! இஷாக் எம்.பி பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு-

அநுராதபுரம் பதவிய குளத்திற்கு மூன்று இலட்சம் மீன் குஞ்சிகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் பெற்றுக்கொடுத்தார்.

பதவிய பிரதேச மீனவர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்ட பிரச்சினைகள் யாவும் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் மற்றும் பதவிய பிரதேச செயலாளர், பதவிய பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் முன்னிலையில் கலந்துரையாடப்பட்டது.

மூன்று இலட்சம் மீன் குஞ்சிகளை வழங்கி தீர்வை பொற்றுக்கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், அங்கு கலந்துரையாடப்பட்ட ஏனைய பிரச்சினைகளுக்கும் தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகக் கூறினார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இன, மத, குல பேதங்களை மறந்து அனைத்து சமூகத்தினருக்கும் தன்னாலான அனைத்து உதவிகளையும் நான் கட்டாயம் செய்வேன். தேர்தல் காலங்களில் மட்டும் வந்து வீர வசனம் பேசும் சொல்வீரன் நான் அல்ல. தேர்தலுக்கு இன்னும் 2 வருடங்கள் இருக்கின்றன, தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்ற முடிவு கூட நான் இன்னுமே எடுக்கவில்லை. மக்களின் குறைகளை தேடியறிந்து நிறைவு செய்து வருபவன் நான் என்றார்.