Breaking
Fri. Dec 5th, 2025

இன நல்லிணக்கத்தை ஏற்ப்படுத்தும் வகையில் இலங்கையின் 71 சுதந்திர நிகழ்வு பொல்கஹவெல ஒரலியத்த அன்பாஸ் அமால்தீன் பவுன்டேஷனின் ஏற்ப்பட்டில் இன்று (04) சிறப்பாக இடம்பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட செயலாளரும் முன்னால் பிரதேசசபை உறுப்பினரும் அன்பாஸ் அமால்தீன் பவுன்டேஷனின் நிறுவுனருமான அன்பாஸ் அமால்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும் சதொச பிரதித் தலைவரும் முன்னால் மாகாணசபை உறுப்பினருமான எம்.என்.நஸீர் (MA) அவர்கள் பிரதம அதிதியாக பங்கேற்று தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

மேலும் இந்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள், பிரதேச செயலக அதிகாரி , பள்ளி தலைவர், பள்ளி நிருவாகசபை உறுப்பினர்கள், ஊர் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வு எமது இலங்கை நாட்டின் சுதந்திர தினம் இதில் ஜாதி மத வேறுபாடின்றி இது எமது நாடு என்று முஸ்லிம் மக்கள் அனைவரும் இலங்கையில் ஏனைய பகுதிகளில் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post