Breaking
Mon. Dec 15th, 2025

65 ஆவது வேலைத்திட்டம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும், திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான அப்துல்லா மஹ்ரூபின்,  திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தில், வெள்ளைமணல், தி/அல் அஷ்ஹர் மகா வித்தியாலயத்தில் பிரதான நுழைவாயில் நிர்மாணப் பணிகள் அப்துல்லா மஹ்ரூப் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் மௌலவி ஹதியாத்துல்லாஹ்வின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், திருக்கோணமலை வலய கோட்ட கல்வி பணிப்பாளர் திரு அரியநாயகம் , கிண்ணியா நகர சபை உறுப்பினர் மஹ்தி , திருகோணமலை நகர சபை உறுப்பினர் முக்தார் உட்பட மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Related Post