அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்”

15 வது வேலைத்திட்டம்

கிண்ணியா கற்குழி பிரதேசத்தில் புதிதாக மைதானம் உருவாக்கம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரும், திருமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின்  திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டத்தில், சூரங்கள் கற்குழி பிரதேச இளைஞர்களின் வேண்டுகோளுக்கிணங்க கிண்ணியா கற்குழி பிரதேசத்தில் புதிதாக மைதானம் உருவாக்கி அதனை செப்பனிடும்  வேலைத்திட்டம் அப்துல்லா மஹ்ரூப் எம்.பியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

16 வது வேலைத்திட்டம்

பைசல் நகர் ஸம் ஸம் வீதி.

அத்துடன், பைசல் நகர் ஸம் ஸம் வீதி, பாடசாலை மாணவர்களின் நலன்கருதி, புதிய வீதியாக உருவாக்கும் வேலைத்திட்ட அங்குரார்ப்பண வைபவம் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூபினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.