Breaking
Fri. Dec 5th, 2025

40 ஆவது வேலைத்திட்டம் 

சேருவில, செல்வநகர், புளியங்குளம் புனரமைப்பு வேலைத்திட்டம் ௦2 மில்லியன் ரூபா நிதியில் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பாராளுமன்ற உறுப்பினரும், திருமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின்,  திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தில், சேருவில பிரதேச சபை உறுப்பினர் ஏ.சி.அன்வரின் வேண்டுகோளுக்கிணங்க, சேருவில, செல்வநகர், புளியங்குளம் புனரமைப்பு பணிகள், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூபினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது பிரதேச சபை உறுப்பினர் றிபாஸ், விவசாய சம்மேளனத்தின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இவ்வேலைத்திட்டத்திற்காக ரூபா இருபது இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 400 ஏக்கர் விவசாய வயல் நிலங்களுக்கு தடையின்றிய நீர்ப்பாசனத்தில், விவசாயிகள் நெற்செய்கையில் ஈடுபட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

(ன)

Related Post