அப்துல்லா மஹ்ரூப் எம் பி இன் முயற்சியால் 2016 விவசாயிகளுக்கான நஷ்டஈட்டு கொடுப்பனவும்,  2017 பெரும்போகதிட்கான அனுமதியும்.

கிண்ணியா வட்டமடு, செம்பிமோட்டை ,ஆயிலியடி ,மஜீத் நகர் , தோப்பூர் , செல்வநகர் பிரதேசங்களில் 2016 பெரும்போக நெற்செய்கையாளர்கலுக்கான நஷ்டஈட்டு கொடுப்பனவு கிடைக்காதவர்களுகான கொடுப்பனவு திருகோணமலை மாவட்ட ஆபிவிருதிகுழு இணைத்தலைவரும் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான பாராளுமன்ற உறுப்பினருர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் முயற்சியின் பலனாக; இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் வெள்ளிகிழமை (25.08.2017) விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு வைப்பிலடப்படவுள்ளது.

அத்துடன் மேற்படி பிரதேசங்களில் இவ்வருடமும் வருகின்ற பெரும்போகம் எவ்விதமான தடையுமின்றி விவசாயிகள் தங்களுடுடைய பெரும்போக நெற்செய்கை, பயிர்செயகைகளை மேட்கொள்வதற்கு 21.08.2017 நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழுவின் அனுமதியும் பாராளுமன்ற உறுப்பினருர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களினால் முன்வைக்கபட்ட பிரேரணையின் அடிப்படையில் விவசாய நெற் செய்கைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் பெரும்போக செய்கைக்கான உழவு வேலைகளை ஆரம்பிக்கலாம்.